இந்த 3 பேருக்கு வாய்ப்பு.. அந்த சீனியருக்கு மட்டும் ஆப்பா? முன்னாள் கேப்டன்கள் விளாசல்!

Watch Video : Australia won Ashes 2019 series

மான்செஸ்டர் : நான்காவது ஆஷஸ் டெஸ்டில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணியில் வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ்-ஐ ஏன் சேர்க்கவில்லை என இங்கிலாந்து முன்னாள் கேப்டன்கள் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளனர்.

2019 ஆஷஸ் தொடரின் முதல் நான்கு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2 - 1 என வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி மீதமுள்ளது.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

இங்கிலாந்து அணி தன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வியது. வலுவான அணியாகவே கருதப்பட்ட இங்கிலாந்து அணி பேட்டிங், பந்துவீச்சில் சொதப்பி தோல்வி அடைந்தது. இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆஷஸ் டெஸ்ட் தொடர்

ஆஷஸ் டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் டிரா ஆனது. மூன்றாவது டெஸ்டை தோல்வியின் விளிம்பு வரை சென்று, பின் வெற்றி பெற்றது இங்கிலாந்து. நான்காவது டெஸ்டில் தோல்வி அடைந்து தொடரை இழந்தது.

நீக்கம்

நீக்கம்

நான்காவது டெஸ்டில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்ற நிலையில் இங்கிலாந்து அணி முக்கிய வீரர் ஒருவரை நீக்கியது. அது ஏன் என்ற காரணம் இதுவரை கூறப்படவில்லை. அந்த முக்கிய வீரர் கிறிஸ் வோக்ஸ்.

கேள்வி எழுப்பினர்

கேள்வி எழுப்பினர்

கிறிஸ் வோக்ஸ்-ஐ நீக்கிவிட்டு கிரெய்க் ஓவர்டன் அணியில் சேர்க்கப்பட்டார். அவர் இரண்டு இன்னிங்க்ஸ் பந்து வீசி 2 விக்கெட்கள் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில், போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது. மூத்த வீரரான கிறிஸ் வோக்ஸ் ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை என கேள்வி எழுப்பி உள்ளனர்.

எடுக்காதது தவறு

எடுக்காதது தவறு

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூறுகையில், இங்கிலாந்து அணி கிறிஸ் வோக்ஸ் போன்ற சீனியர் வீரரை அணியில் எடுக்காததை நான் விரும்பவில்லை. அது தவறு என கூறி உள்ளார்.

ஜோக் போல உள்ளது

ஜோக் போல உள்ளது

மற்றொரு முன்னாள் கேப்டன் நாசிர் ஹுசைன் கூறுகையில், இங்கிலாந்தில் வோக்ஸ்-இன் ஆட்டம் குறித்த புள்ளிவிவரம் ஜோக் போல உள்ளது. அவர் ஏன் நீக்கப்பட்டார் என்பதை அறிய விரும்புகிறேன் என கூறி உள்ளார்.

அது புரியவில்லை

அது புரியவில்லை

ஓவர்டன் பந்து வீசியது சரி தான். ஆனால், கிறிஸ் வோக்ஸ்-ஐ அணியில் எடுக்காதது தவறு. டெஸ்டில் தங்களை நிரூபிக்கத ஜோ டென்லி, ஜோஸ் பட்லர், ஜேசன் ராய்க்கு வாய்ப்பு கொடுக்கும் போது, தன்னை நிரூபித்த கிறிஸ் வோக்ஸ்-க்கு ஏன் வாய்ப்பு அளிக்கவில்லை. அது எனக்கு புரியவில்லை என கூறி இருக்கிறார் நாசிர் ஹுசைன்.

காயமா?

காயமா?

கிறிஸ் வோக்ஸ் காயத்தால் நீக்கப்பட்டாரா என்ற சந்தேகமும் உள்ளது. இங்கிலாந்து அணி நிர்வாகம் அது குறித்து எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், அவரை நீக்கியதற்காக விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Ashes 2019 : Chris Woakes dropped for 4th test criticized by England former players
Story first published: Monday, September 9, 2019, 14:57 [IST]
Other articles published on Sep 9, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X