For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!

Recommended Video

Ashes 2019 5th test | ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!

லண்டன் : ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை 2 - 2 என சமன் செய்தது இங்கிலாந்து.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதிய ஆஷஸ் தொடரின் ஐந்தாவது போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் வெற்றிக்கு 399 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து. ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்ட முடியாமல் 135 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

டிஎன்பிஎல் டி20 தொடரில் மேட்ச் பிக்ஸிங் புகார்.. அதிர வைக்கும் அந்த தகவல்.. பிசிசிஐ விசாரணை!டிஎன்பிஎல் டி20 தொடரில் மேட்ச் பிக்ஸிங் புகார்.. அதிர வைக்கும் அந்த தகவல்.. பிசிசிஐ விசாரணை!

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்யாமல், பந்துவீச்சை தேர்வு செய்து வியக்க வைத்தது. அது அந்த அணிக்கு பின்னடைவாக அமையும் என கருதப்பட்டது.

இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸ்

இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணி 294 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 57, ஜோஸ் பட்லர் 70 ரன்கள் குவித்தனர். ஆஸ்திரேலிய அணி விக்கெட்களை விரைவாக எடுக்கத் தவறியது.

ஆஸ்திரேலியா பந்துவீச்சு

ஆஸ்திரேலியா பந்துவீச்சு

மிட்செல் மார்ஷ் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். பாட் கம்மின்ஸ் 3, ஹேசல்வுட் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். சுழற் பந்துவீச்சாளர் நாதன் லியோன் வெறும் 4 ஓவர் தான் வீசினார். ஜோ ரூட் கொடுத்த மூன்று கேட்ச்களை ஆஸ்திரேலிய வீரர்கள் தவறவிட்டதும் அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸ்

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸ்

அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்க்ஸில் 225 ரன்கள் எடுத்தது. வழக்கம் போல வார்னர் சொற்ப ரன்களில் (5 ரன்கள்) ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் 80 ரன்கள் அடித்து அணியை மீட்டார். லாபு ஷாக்னே 48 ரன்கள் எடுத்தார். ஆர்ச்சர் 6 விக்கெட்கள் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை மிரட்டினார்.

இங்கிலாந்து முன்னிலை

இங்கிலாந்து முன்னிலை

69 ரன்கள் முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி. இதை அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடியது. ஜோ ரூட் கைவிட்டாலும் துவக்க வீரர் டென்லி 94 ரன்கள் குவித்து அணிக்கு பெரும்அளவில் உதவினார்.

கடின இலக்கு

கடின இலக்கு

அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 67, பட்லர் 47 ரன்கள் குவிக்க, இரண்டாம் இன்னிங்க்ஸில் 329 ரன்கள் குவித்தது இங்கிலாந்து. ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது

வார்னர் ஏமாற்றம்

வார்னர் ஏமாற்றம்

மிகவும் கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே ஒரே நம்பிக்கையாக இருந்தார். துவக்க வீரர் வார்னர் இந்த முறையும் ரன் எடுக்காமல் சொதப்பி, 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மேத்யூ வேடு சதம்

மேத்யூ வேடு சதம்

ஸ்டீவ் ஸ்மித் 23 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அப்போதே ஆஸ்திரேலிய அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி ஆனது. எனினும், அடுத்து வந்த மேத்யூ வேடு அதிரடியாக பவுண்டரிகள் அடிக்கத் துவங்கினார். சதம் கடந்து 117 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து வெற்றி

வேடு சதம் அடித்தாலும் இலக்கை எட்ட நூறுக்கும் மேல் ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஆஸ்திரேலிய அணி 263 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.

ஆட்ட நாயகன், தொடர் நாயகன்

ஆட்ட நாயகன், தொடர் நாயகன்

முதல் இன்னிங்க்ஸில் மட்டுமே ஆறு விக்கெட்கள் எடுத்த ஜோப்ரா ஆர்ச்சர் ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆஷஸ் தொடரில் நான்கு டெஸ்ட்களில் மட்டுமே ஆடி 774 ரன்கள் குவித்த ஸ்டீவ் ஸ்மித் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

தொடர் சமன்

தொடர் சமன்

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரை 2 - 2 என சமன் செய்தது இங்கிலாந்து அணி. எனினும், கடந்த ஆஷஸ் தொடரை கைப்பற்றிய அணிக்கு தான் கோப்பை செல்லும் என்ற முறையில், ஆஸ்திரேலியா ஆஷஸ் கோப்பையை தட்டிச் சென்றது.

Story first published: Monday, September 16, 2019, 11:52 [IST]
Other articles published on Sep 16, 2019
English summary
Ashes 2019 : England beat Australia in the 5th test to level the Ashes series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X