For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யப்பா யாராவது தண்ணி கொடுங்க! பதறிய வீரர்.. நொறுங்கிய பாக்ஸ்! இதயம் பலவீனமான ஆண்கள் இதை படிக்காதீங்க

Recommended Video

Watch Video : Mitchell Starc breaks Joe Root's abdominal guard

மான்செஸ்டர் : இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதிய ஆஷஸ் நான்காவது டெஸ்ட் போட்டியில் நூலிழையில் தப்பித்து இருக்கிறார் என் கேப்டன் ஜோ ரூட்.

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீசிய மின்னல் வேக பந்து அவர் பாக்ஸில் (கிரிக்கெட் கார்டு) பட்டது. அப்போது பதறிப் போய் விட்டார் ஜோ ரூட்.

தோனி 2.1 இன்ச்..! விக்ரம் லேண்டர் 2.1 கிமீ..! இந்திய இதயங்களை நொறுக்கிய 2 போட்டோக்கள்..! வைரல்தோனி 2.1 இன்ச்..! விக்ரம் லேண்டர் 2.1 கிமீ..! இந்திய இதயங்களை நொறுக்கிய 2 போட்டோக்கள்..! வைரல்

ஆஷஸ் டெஸ்ட்

ஆஷஸ் டெஸ்ட்

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 497 ரன்கள் குவித்தது, ஸ்டீவ் ஸ்மித் 211 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணிக்கு அது பெரும் அழுத்தத்தை கொடுத்தது.

இங்கிலாந்து பேட்டிங்

இங்கிலாந்து பேட்டிங்

அடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் ஆட வந்தது. அந்த அணியின் துவக்க வீரர் டென்லி 4, ஓவர்டன் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து பர்ன்ஸ், ஜோ ரூட் ஆடி வந்தனர்.

ஜோ ரூட் அசத்தல்

ஜோ ரூட் முதல் இன்னிங்க்ஸில் அசத்தலாக ஆடி 71 ரன்கள் சேர்த்தார். பர்ன்ஸ் 81 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்பினர். ரூட் தன் ஆட்டத்தின் போது 39வது ஓவரில், மோசமான முறையில் மர்ம உறுப்பில் பந்தால் தாக்கப்பட்டார்.

39வது ஓவரில்..

39வது ஓவரில்..

39வது ஓவரில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீசிய நான்காவது பந்து இன்சைட் எட்ஜ் ஆனது. சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் வந்த பந்து, வந்த வேகத்தில் எட்ஜ் ஆகி அவரின் மர்ம உறுப்பில் பலமாக தாக்கியது.

தண்ணீர் குடித்தார்

தண்ணீர் குடித்தார்

உடனே வலியால் துடித்த ஜோ ரூட், கீழே விழுந்தார். தலையை தரையோடு வைத்துக் கொண்ட அவர் மூச்சு விட முயன்றார். சில நிமிடங்கள் வரை அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. பதற்றம் ஓரளவு தணிந்த நிலையில், எழுந்த அவர் தண்ணீர் கேட்டு வாங்கி குடித்தார். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

பாக்ஸ் என்ன ஆச்சு?

கிரிக்கெட் வீரர்கள் மர்ம உறுப்பில் காயம் படாமல் இருக்க பாக்ஸ் என அழைக்கப்படும் கிரிக்கெட் கார்டு அணிவது வழக்கம். ஓரளவு வலியில் இருந்து மீண்ட ஜோ ரூட், தன் பாக்ஸ் சரியாக இருக்கிறதா என எடுத்துப் பார்த்தார்.

நொறுங்கியது

அவர் அணிந்து இருந்த பாக்ஸ் உடைந்து நொறுங்கிப் போய் இருந்தது. வேறு பாக்ஸ் வேண்டும் என்று கேட்டு வாங்கி அணிந்தார் ஜோ ரூட். அந்த பாக்ஸ் மட்டும் இல்லை என்றால், ஜோ ரூட் நிலைமை என்ன ஆகி இருக்கும்?

5 நிமிட தடை

சுமார் 5 நிமிடங்களுக்கும் மேல் போட்டி தடை பட்டது. அதன் பின்னும், ஜோ ரூட் இயல்பாக இல்லை. வெளியே சொல்ல முடியாத சிரமத்தோடு தன் பேட்டிங்கை தொடர்ந்தார் அவர்.

மீண்டும் ஆடினார்

மீண்டும் ஆடினார்

அந்த சம்பவம் நடந்த போது 36 ரன்கள் அடித்து இருந்த ரூட், அதன் பின் நின்று நிதானமாக ரன் சேர்த்து 71 ரன்கள் வரை எடுத்தார். ரசிகர்கள் இந்த சம்பவத்தை கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Saturday, September 7, 2019, 18:38 [IST]
Other articles published on Sep 7, 2019
English summary
Ashes 2019 : Joe Root box damaged as the ball hit at a speed of 140Km.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X