For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கா குறி வைக்கிறீங்க? செஞ்சுருவேன்! 2 நாட்களாக இங்கிலாந்தை கண்ணீர் விட்டு கதற வைத்த ஸ்மித்!

Recommended Video

Ashes 2019 : Steve Smith scored double century

மான்செஸ்டர் : இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இங்கிலாந்தின் ஆர்ச்சர் பவுன்சரில் ஸ்டீவ் ஸ்மித் தலையில் காயம் அடைந்து, மூளை கலங்கிப் போய் ஓய்வில் இருந்தார்.

அதில் இருந்து மீண்டு வந்த அவர் நான்காவது ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை கண்ணீர் விட்டு, கதற விட்டு இரட்டை சதம் அடித்தார்.

ஸ்மித் பதிலடி

ஸ்மித் பதிலடி

ஸ்டீவ் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்ய முடியாத நிலையில், இரண்டாவது டெஸ்டில் அவர் தலைக்கு குறி வைத்து பவுன்சர் வீசப்பட்டு இருக்கலாம் என சிலர் கூறிய நிலையில், ஸ்மித் இங்கிலாந்து அணிக்கு தன் பேட்டால் பதிலடி கொடுத்துள்ளார்.

கை கொடுத்தார் ஸ்மித்

கை கொடுத்தார் ஸ்மித்

ஆஷஸ் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா மோசமான துவக்கம் பெற்றது. வார்னர் டக் அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரர் ஹாரிஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கினார் இரண்டாவது டெஸ்டில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்த ஸ்டீவ் ஸ்மித்.

சூப்பர் இரட்டை சதம்

சூப்பர் இரட்டை சதம்

லாபுஷக்னே 67 ரன்கள் எடுத்தும், டிம் பெய்ன் 58 ரன்கள் எடுத்தும் நீண்ட கூட்டணி அமைத்து ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒத்துழைப்பு அளித்தனர். இரண்டு நாட்கள் பேட்டிங் செய்த ஸ்டீவ் ஸ்மித் 211 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியை சோதித்தார்.

ஆஸி. பெரிய ஸ்கோர்

ஆஸி. பெரிய ஸ்கோர்

ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. மிட்செல் ஸ்டார்க் கடைசி நேரத்தில் 58 பந்தில் 54* ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணியை வெறுப்பேற்றினார். நாதன் லியோன் 26 பந்துகளில் 26* ரன்கள் எடுத்தார்.

ஸ்மித் காயம்

ஸ்மித் காயம்

ஸ்டீவ் ஸ்மித் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து ஆடி வந்த போது, அவர் விக்கெட்டை வீழ்த்த முடியாத நிலையில், ஜோப்ரா ஆர்ச்சர் மின்னல் வேக பவுன்சர் வீசி அவர் கழுத்து மற்றும் தலைப் பகுதியில் தாக்கினார்.

குறி வைத்தாரா?

குறி வைத்தாரா?

இது இயல்பாக நடந்தது என்று கூறப்பட்டாலும், ஆர்ச்சர் அடுத்து வந்த மாற்று வீரரையும் அதே போல தாக்கியதால் வேண்டும் என்றே குறி வைத்து தாக்கியது போன்று தான் இருந்தது.

ஸ்மித் ஓய்வு

ஸ்மித் ஓய்வு

அதன் பின் ஓய்வில் இருந்தார் ஸ்டீவ் ஸ்மித். மூன்றாவது டெஸ்டில் ஆடவில்லை. அந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து நினைத்துப் பார்க்க முடியாத வகையில் பென் ஸ்டோக்ஸ் அதிரடி பேட்டிங்கால் வெற்றி பெற்றது.

இது சரியான பதிலடி

இது சரியான பதிலடி

தலையில் பந்து தாக்கியதால் மூளை கலங்கிப் போய் இருந்த ஸ்மித், அதில் இருந்து மீண்டு வந்து நான்காவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி இரட்டை சதம் அடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் ஸ்மித்.

ஆர்ச்சர் பரிதாபம்

ஆர்ச்சர் பரிதாபம்

குறிப்பாக, ஜோப்ரா ஆர்ச்சர் வேண்டுமென்றே தலையை தாக்கும் வகையில் பவுன்சர் வீசினார் என கூறப்படும் நிலையில், ஸ்டீவ் ஸ்மித் இரண்டு நாட்கள் களத்தில் நின்று இங்கிலாந்து அணியை கதற விட்டார். ஆர்ச்சர் இந்த போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் 27 ஓவர்கள் வீசி 97 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் கூட எடுக்கவில்லை.

2 வாய்ப்புகள்

2 வாய்ப்புகள்

ஸ்மித் கொடுத்த இரண்டு வாய்ப்புகளையும் கோட்டை விட்ட இங்கிலாந்து அவரை வெளியேற்ற முடியாமல் தவித்தது. 211 ரன்கள் அடித்த பின்னரே ஸ்மித் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸில் 23 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து ஆடி வருகிறது.

Story first published: Friday, September 6, 2019, 8:37 [IST]
Other articles published on Sep 6, 2019
English summary
Ashes 2019 : Steve Smith scored double century after concussion. He gave a fitting reply to England for nasty bouncers.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X