For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏம்பா.. நம்பி கேப்டன் பதவி கொடுத்தா இப்படியா உங்க இஷ்டத்துக்கு பண்ணுவீங்க? ரொம்ப தில்லு தான்!

லண்டன் : ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் டாஸ் வென்று எடுத்த முடிவை கண்டு முன்னாள் கேப்டனும், ஜாம்பவனுமான ரிக்கி பாண்டிங் வியந்து போய் இருக்கிறார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாம் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் தொடரை 3 - 1 என கைப்பற்றலாம்.

இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் வென்றால் தான் குறைந்த பட்சம் தொடரை சமன் செய்யலாம். இந்த நிலையில் போட்டிக்கு இரு அணிகளும் தயாராகின.

டாஸ் வென்றார்

டாஸ் வென்றார்

ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் டாஸ் வென்றார். அப்போது ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலிய வீரர்களுடன் பவுண்டரி எல்லை அருகே நின்று இருந்தார்.

மெர்சல் முடிவு

மெர்சல் முடிவு

"டாஸ் வென்று விட்டோம். நாம் பேட்டிங் செய்யப் போகிறோம்" என ஆஸ்திரேலிய வீரர்களிடம் கூறி இருக்கிறார். ஆனால், அப்போது கேப்டன் டிம் பெய்ன் மைக்கில் தாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம் என அறிவித்து மெர்சல் ஆக்கினார்.

ஜோஸ் பட்லர் அதிரடி

ஜோஸ் பட்லர் அதிரடி

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து இருந்தது. ஆனால், ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தால் 294 ரன்களை எட்டியது. பட்லர் கடைசி நேரத்தில் 98 பந்துகளில் 70 ரன்கள் குவித்து தன் அணியை காப்பாற்றினார்.

முடிவு சரியா?

முடிவு சரியா?

தற்போது இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸ்-இல் 294 ரன்கள் குவித்துள்ளது. இது ஓரளவு நல்ல ஸ்கோர் தான் என்பதால், டிம் பெய்ன் எடுத்த டாஸ் முடிவு சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

போட்டி முடியும் வரை..

போட்டி முடியும் வரை..

இது குறித்து பேசிய ரிக்கி பாண்டிங் போட்டி முடியும் வரை இதைப் பற்றி பேச முயற்சிக்க மாட்டேன். அப்போது தான் டிம் பெய்ன் எடுத்த முடிவு சரியா, தவறா என்பது தெரியும் என்று கூறினார்.

கேட்ச் கோட்டை விட்டனர்

கேட்ச் கோட்டை விட்டனர்

ஆனால், ஆஸ்திரேலியா பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு இருந்தால் இந்த பேச்சே வந்து இருக்காது. ஆம், பீல்டிங்கில் கோட்டை விட்ட ஆஸ்திரேலியா இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கொடுத்த மூன்று கேட்ச்களை நழுவ விட்டு அதிர்ச்சி அளித்தது.

மூவரின் சொதப்பல்

மூவரின் சொதப்பல்

பீட்டர் சிடில், டிம் பெய்ன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் என மூன்று வீரர்கள் ஜோ ரூட் கொடுத்த கேட்ச்களை தவற விட்டனர். இதை பயன்படுத்திக் கொண்ட ஜோ ரூட் 57 ரன்கள் எடுத்தார். இந்த விஷயம் தான் டிம் பெய்ன் எடுத்த முடிவு சரியா? இல்லையா? என பேச வைத்துள்ளது.

கத்துக்குட்டி கேப்டன்

கத்துக்குட்டி கேப்டன்

ஸ்டீவ் ஸ்மித் தடை செய்யப்பட்ட போது வெறும் பத்து மேட்ச் மட்டுமே ஆடி இருந்த டிம் பெய்னுக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவி தேடி வந்தது. அப்படி பதவி பெற்றார் அவர்.

கேள்வி

கேள்வி

டாஸ் விஷயத்தில் பாண்டிங் போன்ற ஜாம்பவான்களின் முடிவையும் தாண்டி, தன் இஷ்டத்திற்கு முடிவு எடுத்தாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தப் போட்டியில் வென்றால் விமர்சனத்தில் இருந்து டிம் பெய்ன் தப்பிக்கலாம். இல்லையெனில், வசமாக சிக்குவார்.

Story first published: Friday, September 13, 2019, 19:14 [IST]
Other articles published on Sep 13, 2019
English summary
Ashes 2019 : Tim paine elected to bowl first at fifth test surprises Ricky Ponting
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X