“என்ன மனுஷன் யா”.. வார்னரின் மற்றொரு அழகு செயல்.. ஒட்டுமொத்த மைதானமும் திரும்பி பார்த்த தருணம்!

ஓவல்: ஆஷஸ் தொடரின் போது டேவிட் வார்னர் செய்த சிறு விஷயம் ஒட்டுமொத்த ஓவல் மைதானத்தை திரும்பி பார்க்கவைத்துள்ளது.

உலகின் மிகவும் பிரபலமான இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் 2வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது.

ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸி. வெற்றி.. 400 விக்கெட்டுகளை கடந்த லயான்..!!ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸி. வெற்றி.. 400 விக்கெட்டுகளை கடந்த லயான்..!!

 2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸை மூன்றே ரன்களுக்கு வெளியேற்றினார் இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட். இதனால் 4 ரன்களுக்கெல்லாம் ஒரு விக்கெட்டை இழந்து தடுமாறியது.

சிறந்த பார்ட்னர்ஷிப்

சிறந்த பார்ட்னர்ஷிப்

இதன்பின்னர் கூட்டு சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லாபுஸ்சாக்னே ஜோடி 2வது விக்கெட்டிற்கு 150 ரன்களை சேர்த்து அசத்தியது. ஆனால் இதில் ஒரு சோக விஷயம் என்னவென்றால், டேவிட் வார்னர் சதத்தை தவறவிட்டது தான். 167 பந்துகளில் 95 ரன்களை குவித்த அவர் பென் ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் நடையைகட்டினார். இதனால் சதம் தவறிவிட்டதே என ரசிகர்கள் கவலையடைந்தனர்.

அழகான செயல்

அழகான செயல்

இந்நிலையில் டேவிட் வார்னர் கவலையுடன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் ஆச்சரியம் இருந்தது. மைதானத்தை விட்டு அவர் வெளியேறிய போது, முதல் வரிசையில் நின்றிருந்த சிறுவர்கள் சிலர் வார்னருக்காக உற்சாக கோஷத்தை எழுப்பினர். இதனை கண்ட வார்னர், தான் அணிந்து விளையாடிய கிளவுஸை ஒரு சிறுவனுக்கு அன்பளிப்பாக கொடுத்துவிட்டு சென்றார்.

இணையத்தில் பரவும் வீடியோ

இணையத்தில் பரவும் வீடியோ

வார்னரின் இந்த அழகான செயல் கேமிராவில் தென்பட்டதால், ஓவல் மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் டேவிட் வார்னருக்காக எழுந்து நின்று கைத்தட்டினர். மேலும் இதுகுறித்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் டேவிட் வார்னர், சதத்திற்கு அருகில் வந்து அவுட்டாவது இது 2வது முறையாகும்.

Ashes 2021: Pat Cummins ruled out of 2nd Test, Smith to lead | OneIndia Tamil
2 ஏமாற்றங்கள்

2 ஏமாற்றங்கள்

ஆஷஸின் முதல் டெஸ்ட் போட்டியின் போது வார்னர் சதமடிக்க நெருங்கினார். ஆனால் 94 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதனையடுத்து தற்போது 2வது டெஸ்ட் போட்டியிலும் சதமடிக்க அருகில் சென்று 95 ரன்களுக்கு அவுட்டாகிவிட்டார். 2வது இன்னிங்ஸில் நிச்சயம் தனது சதத்தை அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Australia opener David Warner gifts his hand gloves to kido after falling short of century in Ashes 2021
Story first published: Thursday, December 16, 2021, 17:49 [IST]
Other articles published on Dec 16, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X