அவங்களை நம்ப முடியாது.. 2 தமிழக வீரர்களை குறைத்து மதிப்பிட்ட கோலி.. அடுத்தடுத்து தரமான பதிலடி!

சென்னை: இரண்டு தமிழக வீரர்களை கேப்டன் கோலி தொடர்ந்து ஓரங்கட்டி வந்த நிலையில் தற்போது நடந்து வரும் கிரிக்கெட் தொடரில் இரண்டு பேருமே தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி நேற்று மிகவும் சிறப்பாக ஆடி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது. இதில் இந்திய அணி சார்பாக இரண்டு இன்னிங்சில் மொத்தமாக 7 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார்.

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்துள்ளார். இவரின் சாதனையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

எப்படி

எப்படி

அஸ்வின், சுந்தர் இரண்டு பேரையும் கேப்டன் கோலி தொடர்ந்து ஓரங்கட்டி வந்த நிலையில் தற்போது நடந்து வரும் கிரிக்கெட் தொடரில் இரண்டு பேருமே தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இந்த தொடருக்கு முன் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் அஸ்வின் மிகவும் சிறப்பாக ஆடினார். பேட்டிங் பவுலிங் இரண்டிலும் அஸ்வின் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.

சிறப்பு

சிறப்பு

ஆனால் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய தொடரில் அஸ்வினை எடுக்கும் திட்டமே கோலிக்கு இல்லை . ஜடேஜா இல்லை என்பதால்தான் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்தது. அஸ்வின் பார்மிற்கு திரும்புவார் என்று கோலி பெரிய அளவில் நம்பவில்லை. இதை அஸ்வினும் நேற்று பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

 நம்பிக்கை

நம்பிக்கை

அஸ்வின் பார்ம் மீது கோலிக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் அஸ்வின் இதை எல்லாம் மீறி ஆஸ்திரேலிய தொடரிலும், இங்கிலாந்து தொடரிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அஸ்வின் மீது கோலி பெரிய அளவு நம்பிக்கை வைக்கவில்லை என்றாலும் அஸ்வின் சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபித்து உள்ளார்.

சுந்தர்

சுந்தர்

தற்போது அஸ்வின் ஒரு லெஜண்ட் என்று கோலியே சொல்லும் அளவிற்கு அஸ்வின் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இன்னொரு பக்கம் சுந்தருக்கு ஓவர் கொடுக்காமல் கோலி புறக்கணித்தார். முதல் இன்னிங்ஸ் முழுக்க சுந்தருக்கு கோலி ஓவர் கொடுக்கவில்லை. இவர் மீது நம்பிக்கை இல்லாமல் கோலி செயல்பட்டார்.

விக்கெட்

விக்கெட்

ஆனால் கிடைத்த ஒரே ஒரு ஓவரில் சுந்தர் நேற்று விக்கெட் எடுத்தார் . சிறப்பாக பந்து வீசி 4 பந்தில் 1 விக்கெட் எடுத்தார். இவர்களை கோலி நம்பவில்லை என்றாலும் நேற்று இரண்டு பேருமே தங்கள் பங்கிற்கு இந்திய அணிக்காக சிறப்பாக ஆடினார்கள். இந்திய அணியில் கடந்த சில மாதங்களாக தமிழர்கள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Washington Ashwin and Sundar proved themself to Kohli in the third test against England.
Story first published: Friday, February 26, 2021, 15:51 [IST]
Other articles published on Feb 26, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X