அஸ்வினுக்கு பெரிய மனசு..! அஜாஸ் பட்டேலுக்கு கவுரவும் கிடைக்க செய்த அஸ்வின்..!!

சென்னை: தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் பல சாதனைகளை படைத்தவர். களத்தில் ஆக்கோரஷமாக பந்துவீச கூடியவர்

ஆனால் அஸ்வினின் உயரம் போல், அவரது மனசும் பெரியது என்று உங்களுக்கு தெரியுமா?

ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்திய வீரருக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்கவில்லை. ஆனால் சதம் விளாசிய பேட்ஸ்மேனுக்கு கிடைத்துவிட்டது.

 “என்ன ஒரு குசும்புத்தனம்”.. அக்‌ஷர் - ஜடேஜாவை வைத்து அஸ்வின் செய்த விஷயம்.. வைரலாகும் புகைப்படம்! “என்ன ஒரு குசும்புத்தனம்”.. அக்‌ஷர் - ஜடேஜாவை வைத்து அஸ்வின் செய்த விஷயம்.. வைரலாகும் புகைப்படம்!

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இதுவே பேட்ஸ்மேன்களை மதிப்பது போல் பந்துவீச்சாளர்களை அதுவும் சுழற்பந்துவீச்சாளர்களை யாரும் மதிப்பது என்ற குற்றச்சாட்டுக்கு ஏற்றார் போல் அமைந்தது. ஆனால் அஜாஸ் பட்டேலுக்கு கிடைக்க வேண்டிய கௌரவத்தை சக சுழற்பந்துவீச்சாளராக வழங்கிவிட்டார் அஸ்வின்

பரிசு

பரிசு

நேற்று போட்டி முடிந்ததும் அஸ்வின், இந்திய வீரர்களின் ஜெர்ச்சியில் பயிற்சியாளர் தொடங்கி அணியில் இருந்த கடைசி வீரரின் கையெழுத்தை போட்டு அஜாஸ் பட்டேலுக்கு வழங்கினார். அஸ்வினின் இந்த பாசத்தால் அஜாஸ் பட்டேல் திக்குமுக்காடிவிட்டார். ஆனால் அஸ்வின் அதோடு நிற்கவில்லை.

டிவிட்டர்

டிவிட்டர்

டிவிட்டரில் பெயருக்கு பின்னால் நீல நிற டிக் இருப்பது தான் கவுரவம் என்று நினைக்கும் உலகம் இது. அதாவது உண்மையான பிரபலங்களுடைய சமூக வலைத்தள பக்கம் தான் இது என்று கண்டறிய நீல நிற டிக் டிவிட்டரால் வழங்கப்படும். இந்த நில நிற டிக் இல்லாமல் பலரும் போலி பக்கங்களை உருவாக்கி பல பிராலங்களையும் சிக்கலில் சிக்க வைப்பதுண்டு.

Ashwin அபார சாதனை! Kumble, Harbhajan Record முறியடிக்கப்பட்டது | OneIndia Tamil
அங்கீகாரம்

அங்கீகாரம்

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்து 3 ஆண்டுகள் ஆகியும் அஜாஸ் பட்டேலுக்கு நீற நிற டிக் என்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனை அறிந்த அஸ்வின், ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தியவருக்கு ஏன் இன்னும் நீல நிற டிக் வழங்கவில்லை என்று டிவிட்டரில் கேள்வி எழுப்பினார்.இதனையடுத்து டிவிட்டர் நிர்வாகம் உடனே அஜாஸ் பட்டேலுக்கு நீல நிற டிக் வழங்கியது. அஸ்வினின் இந்த செயல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ashwin brilliant Gesture for Ajaz Patel attracts Fans. Ashwin asks Twitter to Verify Ajaz Patel account. Earlier He gifted Indian Jersey With Player signatures to Ajaz patel
Story first published: Tuesday, December 7, 2021, 12:54 [IST]
Other articles published on Dec 7, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X