நடந்தது ஒன்னு... தீயாய் பரவுவது ஒன்னு.. ஹாட் டாப்பிக்கான கோலியின் கருத்து.. பதிலடி கொடுத்த அஸ்வின்!

சவுத்தாம்டன்: விராட் கோலியின் கருத்து குறித்து விமர்சனங்கள் குவிந்து வரும் சூழலில் ரவிச்சந்திரன் அஸ்வின் நறுக்கென்று பதிலளித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.

கிரிக்கெட்டை விட நட்பு தான் முக்கியம்.. கோலியின் தோளில் வில்லி சாய்ந்த கதை.. மெய்சிலிர்ந்த ரசிகர்கள்கிரிக்கெட்டை விட நட்பு தான் முக்கியம்.. கோலியின் தோளில் வில்லி சாய்ந்த கதை.. மெய்சிலிர்ந்த ரசிகர்கள்

ஆட்டத்தில் பெருவாரியான நேரங்களில் மழைபாதிப்பு இருந்த நிலையில் ரிசர்வ் டேவில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

விராட் கோலியின் கருத்து

விராட் கோலியின் கருத்து

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முறையில் விராட் கோலி அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. அதாவது, உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணியை ஒரே ஒரு போட்டியின் மூலம் தேர்ந்தெடுப்பதில் கோலிக்கு உடன்பாடு இல்லை என்றும் வெற்றியாளரை தீர்மானிக்க 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

ஹாட் டாப்பிக்

ஹாட் டாப்பிக்

தோல்வியின் அடைந்துவிட்ட விரக்தியில் விராட் கோலி ஐசிசி மீது குற்றம் சாட்டுவதாகவும், அவர் கோரிக்கை வைப்பது போல் 3 போட்டிகள் கொண்ட இறுதி முடிவுகளை அமல்படுத்த முடியாது என்றும் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் விமர்சித்து வந்தனர்.

அஸ்வினின் விளக்கம்

அஸ்வினின் விளக்கம்

இந்நிலையில் தமிழக வீரர் அஸ்வின் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், கோலி 3 போட்டிகள் கோரியதாக பேசப்படுவதை அறிந்தேன். ஆனால் அது முற்றிலும் தவறான செய்தி. போட்டி முடிந்த பிறகு விராட் கோலியிடம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வேறு என்ன வித்தியாசம் செய்திருக்கலாம் என மைக்கேல் ஆதர்டான் கேட்டார். அவரின் கேள்விக்கு மட்டுமே விராட் கோலி, 3 போட்டிகளாக நடைபெற்றிருந்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் அப்போதுதான் அணிகளின் பலம் தெரியும் என பதிலளித்தார். மற்றபடி எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.

அடுத்த கோப்பை

அடுத்த கோப்பை

போட்டி குறித்து பேசிய அஸ்வின், இந்திய அணியின் தோல்வியால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக லாக்டவுனுக்கு பிறகு ஒரு நல்ல செய்தியை கேட்க கோடிக்கணக்காணோர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அது நிறைவேறவில்லை. அடுத்த ஐசிசி தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது எனத்தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ashwin Backs Virat Kohli in the Controversy that he demanded 3 Tests for the World Test Championship Final
Story first published: Thursday, July 1, 2021, 19:32 [IST]
Other articles published on Jul 1, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X