For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் போட்டிகள்ல அபாரம்... 20,000 பந்து வீச்சு... 5வது பௌலர்... அதிரடி அஸ்வின்!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தற்போதைய டெஸ்ட் போட்டிகளில் ஆர் அஸ்வின் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பௌலிங் செய்ததன்மூலம் பௌலிங்கில் தனது 20,000 பந்து வீச்சை அவர் இந்த 2020ல் கடந்துள்ளார்.

இதன்மூலம் இந்திய அளவில் இந்த சாதனையை மேற்கொண்டுள்ள 5வது வீரர் மற்றும் சர்வதேச அளவில் 25வது வீரர் என்ற பெருமை அஸ்வினுக்கு கிடைத்துள்ளது.

அவமானமா இருக்கு.. ஐசிசி செய்த காரியம்.. விளாசித் தள்ளிய சோயப் அக்தர்!அவமானமா இருக்கு.. ஐசிசி செய்த காரியம்.. விளாசித் தள்ளிய சோயப் அக்தர்!

கவனத்தை கவர்ந்த அஸ்வின்

கவனத்தை கவர்ந்த அஸ்வின்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சின் மூலம் அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளார் ஸ்பின்னர் ரவிசந்திரன் அஸ்வின். முக்கியமான ஸ்டீவ் ஸ்மித், லாபுசாக்னே போன்ற ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்டுகளை தொடர்ந்து எடுத்து வருகிறார்.

5வது இந்திய வீரர்

5வது இந்திய வீரர்

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 20,000 பந்துகளை வீசிய பௌலர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். இந்திய அளவில் இந்த சாதனையை படைத்துள்ள 5வது வீரர் மற்றும் சர்வதேச அளவில் 25வது வீரர் என்ற பெருமை இதன்மூலம் இந்த 2020ம் ஆண்டின் இறுதியில் அஸ்வினுக்கு கிடைத்துள்ளது.

374 விக்கெட்டுகளுக்கு சொந்தக்காரர்

374 விக்கெட்டுகளுக்கு சொந்தக்காரர்

இந்த சாதனையில் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், கபில் தேவ், பிஷான் பேடி உள்ளிட்டவர்களை தொடர்ந்து அஸ்வினும் இந்த சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார். இதனிடையே, இந்த போட்டியில் லாபுசாக்னேவின் விக்கெட்டை எடுத்து 374 விக்கெட்டுகளை பூர்த்தி செய்துள்ள அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் வாக்கர் யூனிசின் 373 விக்கெட்டுகள் சாதனையையும் முறியடித்துள்ளார்.

20வது பௌலர்

20வது பௌலர்

தற்போது விளையாடிவரும் 3 சர்வதேச வீரர்கள் மட்டுமே அஸ்வினை இந்த சாதனையில் முந்தியுள்ளனர். சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ள 20வது பௌலர் என்ற பெருமையும் அஸ்வினுக்கு கிடைத்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அஸ்வின் இதுவரை 36 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் மட்டும் எடுதுள்ளார்.

3வது இந்திய வீரர்

3வது இந்திய வீரர்

இதிலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ள 3வது இந்திய வீரர் என்ற பெருமையை தட்டி சென்றுள்ளார் அஸ்வின், முதலிடத்தில் 51 விக்கெட்டுகளுடன் கபில்தேவும், 49 விக்கெட்டுகளுடன் அனில் கும்பளே இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மேலும் பிஷன் சிங் பேடியின் 35 விக்கெட்டுகள் சாதனையையும் அஸ்வின் கடந்துள்ளார்.

Story first published: Monday, December 28, 2020, 17:39 [IST]
Other articles published on Dec 28, 2020
English summary
Ashwin now has bowled more than 20,000 balls in Test cricket thus far
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X