For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்த மான்கட் அவுட்ட எப்ப வீழ்த்த போறீங்க... ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த அஸ்வின்

சென்னை : கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலிருக்கும் ஆப் -ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின், ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டர் மூலம் பதிலளித்தார்.

அப்போது, அடுத்த மான்கட் அவுட்டை எப்பொழுது எடுக்கப்போகிறீர்கள் என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்தார் அஸ்வின்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மான்கட் முறையில் அஸ்வின் ஜாஸ் பட்லரை வீழ்த்தி பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது.

5000 கோடி அம்பேல்.. வேகமாக பரவிய கொரோனா.. ரொம்ப லேட்டாக விழித்த பிசிசிஐ.. மாபெரும் தவறு அம்பலம்!5000 கோடி அம்பேல்.. வேகமாக பரவிய கொரோனா.. ரொம்ப லேட்டாக விழித்த பிசிசிஐ.. மாபெரும் தவறு அம்பலம்!

2 முறை மான்கட் முறை அவுட்

2 முறை மான்கட் முறை அவுட்

இந்திய ஆப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய முன்னணி பௌலர்களின் ஒருவராக இருப்பவர். தொடர்ந்து அணியில் இடம்பிடிக்காவிட்டாலும், ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ளவர். மான்கட் முறையில் இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் உள்ளிட்டு இருமுறை எதிரணி வீரர்களை இந்த முறையில் அவுட்டாக்கி அதன்மூலம் விமர்சனங்களை அதிகமாக பெற்றவர்.

ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில்

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டிற்குள் முடங்கியுள்ள அஸ்வின், ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டர் மூலம் பதிலளித்தார். அதில் ரசிகர்கள் அவரை நோக்கி பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்பொழுது ஒரு நபர், அஸ்வினிடமிருந்து மற்றொரு மான்கட் அவுட்டை பார்க்க ஆவலாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

அஸ்வின் கேள்வி

இதற்கு பதிலளித்த ரவிச்சந்திரன் அஸ்வின், அந்த அவுட்டிற்கு பிறகு, தன்னை சுற்றிலும் எழுந்த விமர்சனங்களை நினைவுக்கூர்வதாக குறிப்பிட்டார். கடந்த 2009ல் இலங்கைக்கு எதிராகவும், கடந்த ஆண்டு ஐபிஎல்லில், ஜாஸ் பட்லரையும் அஸ்வின் மான்கட் முறையில் அவுட்டாக்கி அதன்மூலம் பல்வேறு விதமான விமர்சனங்களுக்கு உள்ளானார்.

அஸ்வின் பதில்

அஸ்வின் பதில்

இதனிடையே டிவிட்டர் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்த அஸ்வின், முதல் சந்திப்பிலேயே தன்னை பதற்றத்துக்குள்ளாக்கிய வீரர், ஆஸ்திரேலியாவின் முன்னாள் துவக்க வீரர் மாத்யூ ஹேடன்தான் என்று கூறியுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2009 மற்றும் 2010ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரே நேரத்தில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, April 19, 2020, 14:28 [IST]
Other articles published on Apr 19, 2020
English summary
Ravichandran Ashwin's Reply On "Another Mankad"
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X