400 விக்கெட்.. கிரிக்கெட் உலகில் மாஸ் மகுடம் சூடிய தமிழக வீரர் அஸ்வின்..டெஸ்ட் உலகின் ஸ்பின் பாகுபலி

அகமதாபாத்: சர்வதேச அளவில் அஸ்வின் 401 டெஸ்ட் விக்கெட், 603 சர்வதேச விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தி சாதனை படைத்து இருக்கிறார்.

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 81 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி வெறும் 81 ரன்கள் எடுத்து அவுட்டாகி உள்ளது.

இன்னா அடி... மேஜிக்கை தொடரும் அக்சர்... 5 விக்கெட்டுகள் சாதனையில் ஹாட்ரிக்!

அக்சர் பட்டேல் 5 விக்கெட், அஸ்வின் 4 விக்கெட், சுந்தர் 1 விக்கெட் எடுத்து அசத்தி உள்ளனர். இந்தியாவிற்கு இங்கிலாந்து 48 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

அசத்தல்

அசத்தல்

சர்வதேச அளவில் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக பவுலிங் செய்தவர் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக பவுலிங் செய்து அசத்தினார். அதே பார்மோடு தற்போது இங்கிலாந்துக்கு எதிராகவும் ஆடி வருகிறார்.

விக்கெட்

விக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மொத்தமாக 9 விக்கெட் எடுத்த நிலையில் அஸ்வின் இரண்டாவது போட்டியில் 8 விக்கெட் எடுத்தார். இதன் மூலம் இரண்டு போட்டிகளில் அஸ்வின் 17 விக்கெட் எடுத்தார். இந்த நிலையில் இன்று மூன்று டெஸ்ட் போட்டியிலும் அஸ்வின் கலக்கி வருகிறார்.

கலக்கல்

கலக்கல்

மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட், தற்போது இரண்டாவது இன்னிங்சில் இதுவரை 4 விக்கெட் எடுத்துள்ளார். இதில் அஸ்வின் ஜோப்ரா ஆர்ச்சரின் விக்கெட் எடுத்ததன் மூலம் சர்வதேச அளவில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

சாதனை

சாதனை

தற்போது சர்வதேச அளவில் அஸ்வின் 401 டெஸ்ட் விக்கெட், 603 சர்வதேச விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தி இருக்கிறார் . இதுவரை கும்ப்ளே 619. கபில் தேவ் 434, ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். அஸ்வின் இதே சாதனையை படைக்க வாய்ப்புள்ளது. அஸ்வின் மிகப்பெரிய மகுடத்தை இதன் மூலம் சூட்டியுள்ளார்.

முரளிதரன்

முரளிதரன்

சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் முரளிதரன் 800 விக்கெட் எடுத்துள்ளார்.ஷேன் வார்னே 708 விக்கெட் எடுத்துள்ளார். அஸ்வின் இதே பார்மில் சென்றால் இவர்களின் ரெக்கார்டுகளை இன்னும் சில வருடங்களில் முறியடிக்க வாய்ப்புள்ளது . இந்த தொடரில் இன்னும் அதிக விக்கெட் எடுத்தால் அஸ்வின் ஹர்பஜனின் 417 விக்கெட் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Tamilnadu player Ashwin joins 400 wicket club in international test cricket.
Story first published: Thursday, February 25, 2021, 18:45 [IST]
Other articles published on Feb 25, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X