For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

8 கிலோவால் ஏற்பட்ட மாற்றம்.. லாக்டவுனில் நடந்த சம்பவம்.. அஸ்வின் 2.0 சாத்தியமானது எப்படி? -பின்னணி

சென்னை: சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பார்மிற்கு திரும்பியது எப்படி என்று தமிழக வீரர் அஸ்வின் பேட்டி அளித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் அஸ்வின் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். மூன்று டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணிக்கு அஸ்வின் கடும் நெருக்கடி கொடுத்தார்.

என்னை அணியில் எடுக்கவே யோசித்தனர்.. போட்டிக்கு பின் விளாசிய அஸ்வின்.. வெளியான பரபர உண்மை! என்னை அணியில் எடுக்கவே யோசித்தனர்.. போட்டிக்கு பின் விளாசிய அஸ்வின்.. வெளியான பரபர உண்மை!

நேற்று நடந்த போட்டியில் 7 விக்கெட் எடுத்ததன் மூலம் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை கடந்துள்ளார்.

பேட்டி

பேட்டி

தற்போது அஸ்வின் சர்வதேச போட்டிகளில் சிறந்த பார்மில் இருக்கிறார். பவுலிங் பேட்டிங் இரண்டிலும் அவர் சிறப்பாக பங்களித்து வருகிறார். அஸ்வினின் இந்த புதிய எழுச்சிக்கு லாக்டவுன் சமயத்தில் அவர் மேற்கொண்ட கடுமையான பயிற்சிதான் காரணம் என்கிறார்கள்.

 என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்த போட்டிக்கு பின் அஸ்வின் அளித்த பேட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடருக்காக நான் கடுமையாக பயிற்சி மேற்கொண்டேன். இது தொடர்பாக விராட் மற்றும் ரவி சாஸ்திரியிடம் நாங்கள் ஆலோசனை செய்தோம். அவர்கள் அறிவுரையை கேட்டுக்கொண்டேன்.

பயிற்சி

பயிற்சி

அவர்கள் சொன்னபடி என்னுடைய பவுலிங்கை மாற்றினேன். எனக்கு வயதாகிறது. இதனால் அதற்கு ஏற்றபடி உடற்பயிற்சிகளை செய்தேன். லாக்டவுன் சமயத்தில் இதற்காக நான் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டேன்.

உடல் எடை குறைப்பு

உடல் எடை குறைப்பு

கடினமான பயிற்சிகள் மூலம் நான் 7-8 கிலோ எடையை குறைத்தேன் . இது எனக்கு பெரிய அளவில் உதவியது. இது தொடர்பாக பலரிடம் ஆலோசனை செய்தேன். இந்த ஆட்டத்தில் பேட்ஸ்மேன்களை பார்க்க கொஞ்சம் பரிதாபமாக இருந்தது.

டிரெஸ்ஸிங் ரூம்

டிரெஸ்ஸிங் ரூம்

டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து பேட்ஸ்மேன் ஆடுவதை பார்க்க கஷ்டமாக இருந்தது. டெஸ்ட் போட்டிகளில் எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த பின் இந்திய அணி மிக சிறப்பாக ஆடி மீண்டு வந்து இருக்கிறது, என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, February 26, 2021, 10:57 [IST]
Other articles published on Feb 26, 2021
English summary
During the lockdown, Ashwin lost his 8 Kg weight to get into test team India again.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X