For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம்.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி? என்ன நடக்கிறது?

சென்னை: இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அக்சர் பட்டேல் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணி உள்ளது. மூத்த பவுலர்கள், வீரர்கள் இல்லாமலே ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்திய அணி வீழ்த்தி உள்ளது.

பாதி மீசை எடுத்துட்டு மைதானத்துல விளையாட வர்றேன்... அஸ்வின் ஓபன் சேலஞ்ச் யாருக்கு? பாதி மீசை எடுத்துட்டு மைதானத்துல விளையாட வர்றேன்... அஸ்வின் ஓபன் சேலஞ்ச் யாருக்கு?

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான தொடர் அடுத்த மாதம் நடக்க உள்ளது.

எப்படி

எப்படி

இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, பண்ட், சாகா, பாண்டியா, கே. எல் ராகுல், பும்ரா, இஷாந்த் சர்மா, சிராஜ், ஷரத்துல் தாக்கூர், அஸ்வின், குல்தீப், வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாற்று

மாற்று

இந்திய அணியில் குல்தீப், அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர் ஆகிய ஸ்பின் பவுலர்கள் உள்ள நிலையில் கூடுதலாக அக்சர் பட்டேல் சேர்க்கப்பட்டு உள்ளார். இவரை அணியில் எடுத்தது பெரிய அளவில் கேள்விகளை எழுப்பி உள்ளது. அஸ்வினின் இடத்தை காலி செய்வதற்காக கோலி அக்சர் பட்டேலை எடுத்தாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

 நடந்துள்ளது

நடந்துள்ளது

இதற்கு முன்பே அஸ்வினை கோலி இதேபோல் ஓரம்கட்டி இருக்கிறார். ஒருநாள் அணிக்குள் சாஹல், குல்தீப் ஆகியோரை கொண்டு வந்து அஸ்வினை கோலி ஓரம்கட்டினார். அதன்பின் டி 20 அணியிலும் வாஷிங்க்டன் சுந்தர், சாஹலை களமிறக்கி அஸ்வினை கோலி ஓரம்கட்டினார்.

டெஸ்ட்

டெஸ்ட்

இந்த நிலையில் தற்போது டெஸ்ட் அணியிலும் அஸ்வினை கோலி ஓரம்கட்டுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது. வாஷிங்க்டன் சுந்தர் டெஸ்ட் அணியில் நல்ல ஆல் ரவுண்டராக உருவெடுத்துள்ளார். ஏற்கனவே அணியில் குல்தீப் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்.

சந்தேகம்

சந்தேகம்

இப்படி இருக்கும் போது தற்போது தேவையின்றி அக்சர் பட்டேலை கோலி அணியில் எடுத்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இப்போதே அஸ்வினை கோலி ஓரம்கட்ட தொடங்குகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக அஸ்வினை கோலி ஓரம் கட்டுகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

 முக்கியம்

முக்கியம்

இந்திய டெஸ்ட் அணியின் மிக முக்கியமான பவுலராக அஸ்வின் இருக்கிறார். இவருக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு கொடுத்தாலும் கூட சிறப்பாக ஆடுவார். அப்படி இருக்கும் போது கோலி இவரிடம் பாரபட்சமாக செயல்படுகிறாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Tuesday, January 26, 2021, 15:44 [IST]
Other articles published on Jan 26, 2021
English summary
Ravichandran Ashwin may lose his spot in test Team India also due to Kohli's decision
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X