For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10 ஆண்டுகளில் இந்தியாவின் பிரம்மாண்ட 'மேட்ச் வின்னர்' - அவர் பெயர் ஆர்.அஷ்வின்

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா இடம் பெறாததால், அஷ்வினுக்கு ஒருபக்கம் நெருக்கடி அதிகரித்தாலும், அவரது கடந்த கால டிராக் ரெக்கார்டுகள் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன.

இதோ! நெருங்கிவிட்டது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர். உள்ளூர் பிட்சில் கடும் சவால் அளிக்கும் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. ஆகையால், ஒட்டுமொத்த சுமையையும் அஷ்வின் ஏற்க வேண்டியிருக்கிறது.

2011-ம் ஆண்டில் அறிமுகமானதில் இருந்து இந்திய மண்ணில் அஷ்வின் செலுத்தி வரும் ஆதிக்கம் என்பது நம்ப முடியாதது. அவரது Brilliancy வியக்க வைக்கும். எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அவர் வகுக்கும் வியூகத்தின் ஆற்றலை தோனி நன்கு அறிவார்.

இத்தனை பேர் இருக்காங்க.. தோனிக்கு பறந்த அட்வைஸ்.. குறைந்த தொகைக்கு கொக்கி போட்டு தூக்கும் சிஎஸ்கே இத்தனை பேர் இருக்காங்க.. தோனிக்கு பறந்த அட்வைஸ்.. குறைந்த தொகைக்கு கொக்கி போட்டு தூக்கும் சிஎஸ்கே

பேட்ஸ்மேன்களுக்கு காதில் விழும்படி ஒரு ஸ்டிராடஜி பேசிவிட்டு, அதிலிருந்து இரண்டாவது பந்தில் லெக் ஸ்டெம்புக்கு வைடாக பந்தை வீசி பைல்ஸ்-களை எகிற வைப்பதில் போட்டிப் போட்டு காதல் செய்தது அஷ்வின் - தோனி காம்போ.

 விக்கெட் வேட்டை

விக்கெட் வேட்டை

அஷ்வின் இதுவரை 74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 377 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். ஆவரேஜ் 25.53. ஆனால், உண்மையில் நம்மை வியக்க வைக்கும் stats என்னவெனில் அவரது ஸ்டிரைக் ரேட் 54. இதே வேகத்தில் போனால், முரளிதரன், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே ஆகியோரின் சாதனைகளை அஷ்வினால் தகர்க்க முடியும். அதுவும் ஆஃப் ஸ்பின்னராக அஷ்வின் இந்த சாதனையைப் படைத்தால் ஒரு ராயல் சல்யூட் வைக்கலாம்.

 இது என் ஏரியா

இது என் ஏரியா

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், சொந்த மண்ணில் ஒரு ஸ்பின்னராக சிறந்த ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் உலகின் டாப் வீரர் அஷ்வின் மட்டுமே. இந்தியாவில் வெறும் 43 டெஸ்ட் போட்டிகளில் 254 விக்கெட்டுகளை 'இந்தா வச்சிக்க' மோடில் அறுவடை செய்திருக்கிறார். ஆவரேஜ் 22.8. ஆனால், அவரது ஸ்டிரைக் ரேட் (குறைந்தது 100 விக்கெட்டுகளுக்கு) 49.4. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், சொந்த மண்ணில் ஸ்பின்னர் ஒருவரின் சிறந்த செயல்பாடாகும்.

 ஜாம்பவான்களுக்கு தலைவன்

ஜாம்பவான்களுக்கு தலைவன்

புரியும்படி சொல்ல வேண்டுமெனில், முரளிதரன் இலங்கையில் பந்து வீசுவதைவிட, ஷேன் வார்னே ஆஸ்திரேலியாவில் பந்து வீசுவதை விட, ஜிம் லேகர் இங்கிலாந்தில் பந்துவீசுவதை விட... இவ்வளவு ஏன் அனில் கும்ப்ளே இந்தியாவில் பந்து வீசுவதைவிட, சொந்த மண்ணில் ஒரு மிக அபாயகரமான ஸ்பின்னராக அஷ்வின் இருக்கிறார்.

 பிரம்மாண்ட மேட்ச் வின்னர்

பிரம்மாண்ட மேட்ச் வின்னர்

2013 - 2020 காலக்கட்டம் வரை, சொந்த மண்ணில் இந்திய டெஸ்ட் அணி, அசைக்க முடியாத அணியாக வலம் வந்திருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் மொத்தம் 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா, அதில் 28 போட்டிகளில் வென்றுள்ளது. 5 டிரா. ஒரு போட்டியில் தோல்வி. (ஆஸி.,க்கு எதிராக 2017). இந்த 34 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 200 விக்கெட்டுகளை அள்ளிக்கின்னு வந்திருக்கிறார் நம்ம அஷ்வின். ஆவரேஜ் 21.57. ஸ்டிரைக் ரேட் 47.8. இதில் 16 முறை 5 விக்கெட்டுகளும், 5 முறை 10 விக்கெட்டுகளும் அடங்கும்.

 ஒயிட் வாஷ் கிங்

ஒயிட் வாஷ் கிங்

இதே காலக்கட்டத்தில் உள்நாட்டில் இந்தியா பெற்ற நான்கு முக்கிய டெஸ்ட் தொடர் வெற்றிகளில், அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய நபராகவும் அஷ்வின் திகழ்கிறார் (லிஸ்ட் போயிகிட்டே இருக்கு..). 2015-16ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-0 வெற்றியில் 31 விக்கெட்டுகளையும், 2013ல் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில், 4-0 என ஒயிட் வாஷ் செய்த போது 29 விக்கெட்டுகளையும், 2016-17ல் கடைசியாக இங்கிலாந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த தொடரில், 4-0 என்ற வெற்றியில் 28 விக்கெட்டுகளையும், 2016 இல் நியூசிலாந்துக்கு எதிரான 3-0 ஸ்வீப்பில் 27 விக்கெட்டுகளையும் கழட்டி மாட்டியிருக்கிறார்.

Story first published: Wednesday, February 3, 2021, 13:01 [IST]
Other articles published on Feb 3, 2021
English summary
ashwin ravichandran records in test cricket makes you wonder
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X