அவரை பற்றி தெரியும்.. அஸ்வினை மறைமுகமாக சீண்டிய யுவராஜ்.. பிரஸ் மீட்டில் கொடுக்கப்பட்ட பதிலடி!

சென்னை: இந்திய ஸ்பின் பவுலர்கள் குறித்து முன்னாள் வீரர் யுவராஜ் சிங் செய்த விமர்சனத்திற்கு தமிழக வீரர் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.

அகமதாபாத் டெஸ்டில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில் இந்திய ஸ்பின் பவுலர்களை பலரும் இணையத்தில் பாராட்டி வருகிறார்கள். ஆனால் இந்திய அணியின் ஸ்பின் பவுலர்களை மறைமுகமாக கிண்டல் செய்யும் விதமாக யுவராஜ் சிங் டிவிட் செய்து இருந்தார்.

இன்னா அடி... மேஜிக்கை தொடரும் அக்சர்... 5 விக்கெட்டுகள் சாதனையில் ஹாட்ரிக்!

இந்திய ஸ்பின் பவுலர்கள் பிட்சை பயன்படுத்தி விக்கெட் எடுத்துவிட்டனர், என்று யுவராஜ் சிங் விமர்சனம் செய்து இருந்தார்.

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங் தனது விமர்சனத்தில், இந்த டெஸ்ட் போட்டி இரண்டு நாளில் முடிந்துவிட்டது. இது நல்ல டெஸ்ட் போட்டியா என்ற சந்தேகம் உள்ளது. ஹர்பஜன், அணில் கும்ப்ளே இந்த பிட்சில் பவுலிங் செய்திருந்தால் அவர்கள் 1000 அல்லது 800 விக்கெட்டுகளை எடுத்து இருப்பார்கள். இருந்தால் நன்றாக பவுலிங் செய்த அக்சர், அஸ்வின், இஷாந்த் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என்று யுவராஜ் டிவிட் செய்துள்ளார்.

அஸ்வின்

அஸ்வின்

இந்த நிலையில் அஸ்வின் அளித்த பேட்டியில், அகமதாபாத் பிட்ச் மீது இங்கிலாந்து அணிக்கு கோபம் இருப்பதாக தெரியவில்லை. அணிக்கு வெளியில்தான் பிட்ச் மீது பலர் புகார் வைக்கிறார்கள். நாங்கள் எப்போதும் இது போல பிட்ச் மீது புகார் வைத்தது இல்லை.

எப்படி

எப்படி

எந்த பிட்ச் எங்களுக்கு வழங்கப்படுகிறதோ அதில் நாங்கள் விளையாடுவோம். நான் பொதுவாக விமர்சனங்களை கவனிப்பது இல்லை. இத்தனை விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு ஆட்டங்களை ஆடுவது இல்லை.

சாதகமான பிட்ச்

சாதகமான பிட்ச்

என் மீது யாராவது விமர்சனம் வைத்தால் அதை கண்டுகொள்ள மாட்டேன். யுவராஜ் என்னை குறித்து விமர்சனம் செய்ததை நான் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவருடன் நெருங்கிய நட்பு இருக்கிறது. அவருடன் நிறைய போட்டிகளில் ஆடி இருக்கிறேன்.

கருத்து

கருத்து

அவரை பற்றி எனக்கு தெரியும். அவருடைய கருத்துக்களை நான் தலையில் ஏற்றிக்கொள்வில்லை. நான் என்னுடைய ஆட்டம் மீதுதான் கவனம் செலுத்துகிறேன். இதை எப்படி முன்னேற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறேன். இதை தவிர வேறு குறிக்கோள் எனக்கு இல்லை என்று அஸ்வின் கூறியுள்ளார் .

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ashwin replies to the Yuvraj Singh controversy on the Ahmedabad pitch.
Story first published: Sunday, February 28, 2021, 10:00 [IST]
Other articles published on Feb 28, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X