For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தானை ரசிகருடன் கைகோர்த்து கலாய்த்து தள்ளிய மன்கட் புகழ் வீரர்... படு வைரல்

லண்டன்: பவுலர் முனையில் 10 ரன் அவுட் செய்தால் கூட வங்கதேசத்தை பாகிஸ்தான் வெல்ல முடியாது என்று பாகிஸ்தானை அஸ்வின் கிண்டலடித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் படு வைரலாகி இருக்கிறது.

நடப்பு உலக கோப்பையில் 4வது இடத்தை பிடிப்பதில் பாகிஸ்தானிற்கும், நியூசிலாந்திற்கும் போட்டி நிலவியது. 11 புள்ளிகளுடன் அதிக ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது. இருப்பினும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு செல்வோம் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

Ashwins mankading advice to pakistan

ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போனது. காரணம் பாகிஸ்தான் 313 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் தான், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு இருந்தது. போட்டியில் முதலில் மட்டையை சுழற்றிய பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது.

தோனியை பற்றிய அந்த வீடியோ.. ஏன் இப்போது வெளியிட்டீர்கள்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்.. என்ன நடந்தது? தோனியை பற்றிய அந்த வீடியோ.. ஏன் இப்போது வெளியிட்டீர்கள்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்.. என்ன நடந்தது?

இந்த ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறாது என்பது உறுதியாகிவிட்டது. காரணம் வங்கசேத்தை 7 ரன்னில் ஆட்டமிழக்க செய்ய வேண்டும் என்ற என்ற கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. ஆனால், வங்கதேசம் 7 ரன்களை கடந்த போது அந்த அரையிறுதி வாய்ப்பு தவிடு பொடியானது..

இதனிடையே பாகிஸ்தான் அணியினை இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ட்விட்டரில் பயங்கரமாக கிண்டலடித்து இருக்கிறார். அவருடைய ட்விட்டர் பதிவில் பாகிஸ்தான் தகுதி பெற 311 ரன்கள் வித்தியாசம் தேவை என்று கிண்டலுடன் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு ஒரு ரசிகர் பதிலளித்தார். அவர், மான்கடிங் செய்வது கூட பாகிஸ்தானுக்கு கை கொடுக்காது என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த அஸ்வின் , நிச்சயமாக. பவுலர் முனையில் 10 ரன் அவுட் (அதாவது மன்கடை தான் அவர் இப்படி கூறுகிறார்) செய்தால் கூட இது முடியாத விஷயம் என்றார். அந்த கிண்டல் பதிவு வைரலாகி இருக்கிறது.

Story first published: Saturday, July 6, 2019, 14:30 [IST]
Other articles published on Jul 6, 2019
English summary
Ashwins mankading advice to Pakistan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X