For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீண்டும்.. மீண்டும் களத்தில் அதை செய்யும் அஸ்வின்..! புலம்பும் பேட்ஸ் மென்கள்..!

Recommended Video

TNPL 2019 : Ashwin Bowling Style :களத்தில் மீண்டும் அதை செய்யும் அஸ்வின்..! புலம்பும் பேட்ஸ்மென்கள்

நெல்லை: டிஎன்பிஎல் தொடரில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வித்தியாசமாக பந்துவீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 4வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் பலத்த வரவேற்புக்கு இடையே அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியும், அருண் கார்த்திக் தலைமையிலான மதுரை பேந்தர்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டி நெல்லையில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த திண்டுக்கல் ட்ராகன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 182 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜெகதீசன் 87 ரன்களும், ஹரி நிஷாந்த் 57 ரன்களும் எடுத்தனர்.

1000 ரன்கள்

1000 ரன்கள்

இந்த போட்டியின் மூலம் டிஎன்பிஎல் தொடரில் 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் ஜெகதீசன். அடுத்து பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.

3 விக்கெட்டுகள்

3 விக்கெட்டுகள்

அதனால் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணியை பொறுத்தவரை பந்துவீச்சாளர்களில் சிலம்பரசன் 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

வித்தியாசமான பவுலிங்

போட்டியின் கடைசி ஓவரை அஸ்வின் வீசினார். அவர் தமது வித்தியாசமான பவுலிங்கால் வழக்கம் போல அனைவரையும் கவர்ந்தார். அதாவது, ஓடி வரும் போது பந்தை பின்னால் வைத்துக் கொண்டு பவுலிங் செய்யும் முறையை பின்பற்றி வருகிறார்.

கைகொடுக்கும்

கைகொடுக்கும்

பேட்ஸ்மென்களை குழப்பி, அதன் மூலம் விக்கெட் எடுக்கும் இந்த பாணி அவருக்கு வெற்றியை கொடுத்து வருகிறது. அந்த போட்டியில் கடைசி ஓவரில் அவருக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தன. ஆனால் இந்த மாதிரி பவுலிங் தேவையா? சர்வதேச ஆட்டங்களில் தம்மை நிரூபித்தவர் இப்படி பந்தை வீசலாமா என்று ரசிகர்கள் குழம்பி இருப்பதோடு, கேள்வியையும் எழுப்பி உள்ளனர்.

Story first published: Tuesday, July 23, 2019, 21:01 [IST]
Other articles published on Jul 23, 2019
English summary
Ashwin's mystery bowling continues in tnpl series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X