For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுக்கும் மேல் கஷ்டப்படுத்த வேண்டாம்.. ஆஸி.க்களை வைத்து செய்த அஸ்வின் - விஹாரி.. தரமான சம்பவம்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் அஸ்வின் - விஹாரி ஜோடியின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் திணறி வருகிறார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி.. ஒரு டெஸ்ட் போட்டிக்கு எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது. டெஸ்ட் மன்னன் ராகுல் டிராவிட்டின் பிறந்த நாளில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் நிதானமாக டெஸ்ட் போட்டி ஆடி வருவது பலருக்கும் ஆச்சர்யம் அளித்துள்ளது.

 புஜாரா -பந்த் அதிரடி பார்ட்னர்ஷிப்... சதத்தை தவறவிட்ட பந்த்... புஜாரா 77 ரன்களுக்கு அவுட் புஜாரா -பந்த் அதிரடி பார்ட்னர்ஷிப்... சதத்தை தவறவிட்ட பந்த்... புஜாரா 77 ரன்களுக்கு அவுட்

அதிலும் 43 வருடங்களுக்கு பின் இந்திய அணி நான்காவது இன்னிங்சின் கடைசி நாள் ஆட்டத்தில் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி வருவது இந்திய அணி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

மோசமான சூழ்நிலை

மோசமான சூழ்நிலை

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பண்ட் - புஜாரா அவுட்டான பின் விஹாரி, அஸ்வின் இருவரும் இன்று களமிறங்கினார்கள். ஜடேஜா காயம் காரணமாக களமிறங்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் இந்திய அணி தோல்வியை தவிர்த்து ஆட்டத்தை டிரா செய்ய திட்டமிட்டது.

 அதிரடி

அதிரடி

இதையடுத்து காயத்தோடு ஆடிய விஹாரி - அஸ்வின் இருவரும் டிபன்ஸ் ஆட தொடங்கினார்கள். சிக்ஸர், பவுண்டரி மட்டுமல்ல சிங்கிள் கூட அடிக்க வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தனர். அதிலும் விஹாரி.. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் போடுங்கள் நாங்கள் டொக்தான் வைப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார்.

எத்தனை

எத்தனை

அதிலும் 100+ பந்துகளை பிடித்து விஹாரியை வெறும் 6 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி கூட விஹாரி அடிக்கவில்லை. இன்னொரு பக்கம் அஸ்வின் அவ்வப்போது பவுண்டரி அடித்தார். ஆனாலும் லைன், ஹஸல்வுட் போன்ற பவுலர்களை மிகவும் நேர்த்தியாக அஸ்வின் எதிர்கொண்டார்.

மாஸ்

மாஸ்

ஆஸ்திரேலிய அணியும் அஸ்வினைஇ சுற்றி 5 பீல்டர்களை நிறுத்தியும் கூட அவர்களால் அஸ்வினை சாய்க்க முடியவில்லை. பல வருடம் தியானம் செய்ய யோகி போல அஸ்வின் களத்தில் மௌனம் காத்தார். ஒரு பக்கம் பவுலர்களின் பவுன்சர், யார்க்கர், இன்னொரு பக்கம் கீப்பரின் தொடர் ஸ்லெட்ஜிங்.. இதெல்லாம் போக உடலில் காயம் என்று அஸ்வின் - விஹாரி ஜோடி மிகவும் உறுதியாக ஆடினார்கள்.

முடியாது

முடியாது

என்ன செய்தாலும் எங்கள் விக்கெட்டை நீங்கள் எடுக்க முடியாது என்பதில் இருவரும் உறுதியாக இருந்தனர். ஆஸ்திரேலிய வீரர்கள் பொறுமை இழந்து, கோபம் அடையும் நிலைக்கு அஸ்வின் - விஹாரி கொண்டு சென்றார்கள். ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெயின் அஸ்வினை வம்பிழுக்க.. அஸ்வின் அதிரடியாக பேட்டிங் மூலம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்றினார்.

சிறப்பு

சிறப்பு

இன்று ராகுல் டிராவிட் பிறந்தநாள்.. அதற்கு ஏற்றபடி சிறப்பான டெஸ்ட் பேட்டிங் ஆட்டத்தை இந்திய பேட்ஸ்மேன்கள் அஸ்வின் - விஹாரி ஆகியோர் வெளிப்படுத்தி உள்ளனர். இன்றைய ஆட்டம் டிராவை நோக்கி செல்ல இவர்கள் இருவர் மட்டுமே காரணம். இருவரின் ஆட்டம் இந்திய டெஸ்ட் வரலாற்றில் மிக முக்கியமான ஆட்டமாக இருக்க போகிறது.

Story first published: Monday, January 11, 2021, 12:25 [IST]
Other articles published on Jan 11, 2021
English summary
Ashwin - Vihari partnership smashes Australia's dream to win the 3rd test against India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X