For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரூல்ஸ் இருந்தா அஸ்வின் அப்படி செய்யலாமா? வறுத்தெடுத்த நம்ம ஊரு ஜென்டில் மேன்

Recommended Video

IPL 2019: ஒரே ஒரு அவுட்... சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்- வீடியோ

ஜெய்பூர்: பட்லரை அவுட்டாக்க அஸ்வின் செய்தது விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என்று ஜென்டில் மேன் ராகுல் டிராவிட் நச் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெய்பூரில் நடைபெற்ற லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 14 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. அந்த போட்டியில் அஸ்வின், பட்லரை சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட் செய்து வெளியேற்றினார். இது மிக பெரிய விவகாரமாக மாறியுள்ளது.

உள்ளூர் தொடர் என்பதால் வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டும் பாரபட்சம் பார்த்து இந்த முறையை பயன்படுத்துவதால் வெளிநாட்டு வீரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மன்கட் முறை கிரிக்கெட் விதிமுறைக்கு உட்பட்டது.

டெல்லி டீம்.. ஏன் இப்படி? வாட்சனுடன் சண்டை போட்ட இஷாந்த்! கேலி செய்த ரபாடா! பாண்டிங் பஞ்சாயத்து! டெல்லி டீம்.. ஏன் இப்படி? வாட்சனுடன் சண்டை போட்ட இஷாந்த்! கேலி செய்த ரபாடா! பாண்டிங் பஞ்சாயத்து!

எதிரான ஒன்று

எதிரான ஒன்று

ஆனால் அது போன்ற பேட்ஸ்மேனை அவுட்டாக்குவது விளையாட்டு உணர்வுக்கு எதிரானது. இதை பல்வேறு தருணங்களில் பல கிரிக்கெட் வீரர்கள் கூறி வருகின்றனர்.

பட்லருக்கு வாய்ப்பில்லை

பட்லருக்கு வாய்ப்பில்லை

இந்த முறையில் ஒருவீரரை அவுட்டாக்கினாலும், அணி கேப்டன் அந்த முறையை விரும்பவில்லை என்று கருதினால், நாட் அவுட் என்று அறிவிக்கப்படுவார்கள். ஆனால் பஞ்சாப் கேப்டன் அஸ்வினே இந்த முறையை செய்ததால் பட்லருக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.

டிராவிட் கருத்து

டிராவிட் கருத்து

இதுகுறித்து ஜென்டில்மேன் வீரர் டிராவிட் காட்டமான கருத்தை கூறி இருக்கிறார். அவர் கூறி இருப்பதாவது:கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு, பட்லரை அஸ்வின் அவுட்டாக்கிய முறை கிரிக்கெட் விதி முறையில் இருக்கிறது.

ஏமாற்றமானது

ஏமாற்றமானது

ஆனால் அந்த முறை விளையாட்டு உணர்வுக்கு எதிரானது. முதலில் எச்சரிக்கை ஒன்றை கொடுத்திருக்க வேண்டியது அவசியமானது. அதை அஸ்வின் ஏன் செய்யவில்லை என்பது தான் ஏமாற்றம் என்றார்.

Story first published: Wednesday, March 27, 2019, 12:33 [IST]
Other articles published on Mar 27, 2019
English summary
Ashwin was well within his rights but personally, I would prefer it if somebody warns someone first says rahul dravid about jos buttler incident.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X