For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டன் அஸ்வினை டீம்ல இருந்தே தூக்கியாச்சு! அதிர வைத்த ஐபிஎல் அணி.. அடுத்த கேப்டன் யாரு தெரியுமா?

Recommended Video

Ashwin in delhi capitals | அஸ்வினை வைத்து பேரம்.. முட்டிக் கொண்ட ஐபிஎல் அணிகள்!

மொஹாலி : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து அஸ்வின் பிரிய உள்ளதாக அதன் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா கூறி இருக்கிறார்.

முன்னதாக அஸ்வின் நீக்கப்பட்டார் எனவும், இல்லை பஞ்சாப் அணியில் நீடிக்கிறார் எனவும் கடந்த சில மாதங்களாக வதந்திகள் பரவி வந்தன. அதற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் கிங்ஸ் லெவன் பஞ்சாப் உரிமையாளர்.

கேபிஎல் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட ஒரு அணியின் கேப்டன், விக்கெட் கீப்பர் கைது!கேபிஎல் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட ஒரு அணியின் கேப்டன், விக்கெட் கீப்பர் கைது!

பிரியப் போகிறோம்

பிரியப் போகிறோம்

கடந்த இரு சீசன்களில் கேப்டனாக இருந்த அஸ்வினை அணியை விட்டு நீக்கப் போவதை மரியாதையாக "பிரியப் போகிறோம்" என கூறி இருக்கிறார். அடுத்த கேப்டன் யார் என்பது பற்றிய ஊகங்களும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இரண்டு சீசன்கள்

இரண்டு சீசன்கள்

கடந்த 2018 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணி ஏழாம் இடம் பிடித்தது. 2019 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி ஆறாம் இடம் பிடித்தது. இந்த இரண்டு தொடரிலும் அஸ்வின் தலைமையில் அந்த அணி முதல் பாதியில் கலக்கலாக ஆடியது. எனினும், அந்த அணியால் பிளே - ஆஃப் செல்ல முடியவில்லை.

விற்க முடிவு

விற்க முடிவு

அஸ்வினை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப் போவதாக பஞ்சாப் அணி வட்டாரத்தில் இருந்து முதலில் செய்தி வந்தது. பின்னர், அவரை அணியில் இருந்தே நீக்க முடிவு செய்து, வேறு அணிக்கு விற்கப் போவதாக தகவல் கிடைத்தது.

டெல்லி கேபிடல்ஸ் ஆர்வம்

டெல்லி கேபிடல்ஸ் ஆர்வம்

அஸ்வினை வாங்க அதிக ஆர்வம் காட்டியது டெல்லி கேபிடல்ஸ் அணி. ஒரு முறை அணி மாற்ற ஒப்பந்தம் தயாராகி விட்டதாக கூட செய்தி வெளியானது. ஆனால், அதன் பின் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

அனில் கும்ப்ளே வரவு

அனில் கும்ப்ளே வரவு

இடையே, அனில் கும்ப்ளே பஞ்சாப் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவர் வரவை அடுத்து அஸ்வின் பஞ்சாப் அணியில் நீடிப்பார் என திடீர் தகவல் வெளியானது.

நீடித்த குழப்பம்

நீடித்த குழப்பம்

இப்போது அஸ்வினை விட்டு பிரிய முடிவு செய்துள்ளதாக கூறும் அதே உரிமையாளர், அன்று அஸ்வின் அணியின் முக்கிய அங்கம் என புது குண்டை தூக்கிப் போட்டு, அஸ்வின் பஞ்சாப் அணியில் நீடிக்கிறார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார்.

படியாத பேரம்

படியாத பேரம்

அஸ்வின் அணி மாற்றம் பற்றிய தகவல்கள் முன்னும், பின்னுமாக இருக்க முக்கிய காரணமாக பஞ்சாப் - டெல்லி அணிகள் இடையே ஆன பேரம் படியவில்லை என கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

தற்போது பேசிய நெஸ் வாடியா, வேறு சில அணிகளிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறி இருக்கிறார். எனவே, கேப்டன் அஸ்வின் அணியில் இருந்து மொத்தமாக நீக்கப்பட இருக்கிறார் என்பது உறுதி ஆகி இருக்கிறது.

அடுத்த கேப்டன் யார்?

அடுத்த கேப்டன் யார்?

இந்த நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கிறிஸ் கெயில், டேவிட் மில்லர் போன்ற அனுபவ வீரர்கள் இருந்தாலும், அனுபவமும், இளமையும் கலந்த கேப்டனை தான் பஞ்சாப் அணி தேர்வு செய்யும் என தெரிகிறது. அப்படி அந்த அணியில் இருக்கும் வீரர் ராகுல் தான்.

ஏன் ராகுல்?

ஏன் ராகுல்?

இந்திய அணியில் ஆடி வரும் ராகுல் டி20 போட்டிகளில் சிறப்பான பேட்டிங் சராசரி வைத்துள்ளார். சர்வதேச அளவில் அனுபவமும் கொண்டுள்ளார். அவர் இந்திய வீரர் என்பதாலும் அவருக்கு முன்னுரிமை கொடுத்து பஞ்சாப் அணி அவரையே கேப்டனாக நியமிக்கும் என கூறப்படுகிறது.

Story first published: Thursday, November 7, 2019, 16:25 [IST]
Other articles published on Nov 7, 2019
English summary
Ashwin will be trade out of KXIP soon and who will be their new captain? Sources says KL Rahul could become captain.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X