2023ல் தான் ஆசிய கோப்பை... இந்தியாவில் உலகக்கோப்பை இல்லை... ஷாக் மேல் ஷாக் கொடுத்த புதிய அறிவிப்பு

பாகிஸ்தான்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கொரோனா காரணமாக இந்தாண்டு ஜூன் மாதம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடர் 2023ம் ஆண்டுக்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஷான் மணி தெரிவித்துள்ளார்.

 கொரோனா

கொரோனா

6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த போட்டியை நடத்தும் உரிமையை பெற்று இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இதனை இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு விட்டுக்கொடுத்து விட்டு, அதற்கு மாற்றாக அடுத்த ஆசிய போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ள இலங்கையிடம் இருந்து அந்த உரிமையை பெற்று இருப்பதாக செய்திகள் வெளியாகின்.

மீண்டும் தள்ளிவைப்பு

மீண்டும் தள்ளிவைப்பு

இது குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மணி, இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிக்கு முன்னேறும். அதன் இறுதிப்போட்டி ஜூன் 17ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் ஜூன் மாதம் நடத்த திட்டமிடப்பட்ட ஆசிய கோப்பை பாதிக்கப்படும். இதனால் இப்போட்டி 2023க்கு தள்ளிவைக்கபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை

உலகக்கோப்பை

இதே போல இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தள்ளிவைக்க வாய்ப்புள்ளதாகவும் மணி தெரிவித்துள்ளார். இந்தியா வருவதற்கு பாகிஸ்தான் அணி மற்றும் ஊழியர்களுக்கு பிசிசிஐ இன்னும் விசாவை உறுதி செய்யாததால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படலாம் என தெரிவித்துள்ளார்.

பிடிவாதம்

பிடிவாதம்

ஆசிய கோப்பை தொடரை இந்த முறை நடத்த பாகிஸ்தா உரிமையை பெற்று இருந்தது. ஆனால் பாகிஸ்தானில் நடைபெற்றால் இந்தியா பங்கேற்காது என பிசிசிஐ தெரிவித்ததால் தொடரை நடத்தும் உரிமையை இலங்கைக்கு விட்டுக்கொடுத்தது பாகிஸ்தான். இதனால் உலகக்கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா பிரச்னையில் பிசிசிஐ என்ன முடிவெடுக்கப் போகிறது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
PCB Chairman says Asia Cup 2021 likely to be postpone
Story first published: Sunday, February 28, 2021, 21:15 [IST]
Other articles published on Feb 28, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X