ஆசிய கோப்பை 2022 - 17 புலிக்குட்டிகளை களமிறக்கும் வங்கதேசம்.. 5 ஆண்டுக்கு பிறகு கேப்டனாகும் ஷகிபுல்

டாகா: 2022ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 17 வீரர்களை வங்கதேசம் அணி அறிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது மீண்டும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக ஷகிபுல் ஹசன் அணிக்கு திரும்பியுள்ளார்.

தமீம் இக்பால் தலைமையிலான அணி ஜிம்பாப்வேவிடம் மிதி வாங்கி வந்த நிலையில், தற்போது ஆசிய கோப்பையில் இழந்த மானத்தை மீட்கம் முயற்சியுடன் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பையில் ரோகித்துக்கு கண்டம்.. பாகிஸ்தானுக்கு எதிராக திணறிய ஹிட்மேன்.. ரெக்காட்ஸ் இதோ ஆசிய கோப்பையில் ரோகித்துக்கு கண்டம்.. பாகிஸ்தானுக்கு எதிராக திணறிய ஹிட்மேன்.. ரெக்காட்ஸ் இதோ

வெறுப்பாளர்கள்

வெறுப்பாளர்கள்

வங்கதேச அணியை பார்த்தாலே நம் ரசிகர்களுக்கு படிக்காதவன் படத்தில் வரும் விவேக் போலி தாதாவாக செய்யும் அலப்பறைகள் தான் நினைவுக்கு வரும். திறமைகள் இருந்தும் களத்தில் நடந்து கொள்ளும் விதம், நாகினி டான்ஸ் போன்ற செயல்களால், ரசிகர்களை விட வெறுப்பாளர்களை தான் அந்த அணி சம்பாரித்துள்ளது.

காலம்

காலம்

இந்த நிலையில்,ஆசிய கோப்பை தொடரில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்று, ஜிம்பாப்வே கொடுத்த காயத்திற்கு மருந்து தடவி கொள்ள துபாய் செல்கிறது வங்கதேச அணி. அங்கு மருந்து கிடைக்கிறதா இல்லை, இந்தியா, பாகிஸ்தான் கையில் இதை விட அதிக தர்ம அடி வாங்குகிறதா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.

ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை

ஷகிபுல் ஹசன் தலைமையிலான அணியில் நட்சத்திர வீரர் முஸ்பிகுர் ரஹிம், மகமுதுல்லா, முஸ்தபிசுர் ரஹ்மான், டஸ்கின் அகமது, அனாமுல் ஹக், மெகிதி ஹசன் போன்ற திறமையான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். நாம் எற்கனவே சொன்னது போல, வங்கதேசம் அணி திறமையான அணி தான். சிரிக்க வேண்டாம். உண்மையிலேயே ஆசிய கோப்பை வரலாற்றை பார்த்தால் தெரியும், 2012, 2016 மற்றும் 2018 என ஆகிய மூன்று தொடர்களிலும் இறுதிப் போட்டி வரை அந்த அணி வந்தள்ளது.

வங்கதேச அணி விவரம்

வங்கதேச அணி விவரம்

ஷகிபுல் ஹசன் (கேப்டன்), அனாமுல் ஹக், முஸ்பிகுர் ரஹிம், ஆஃபிப் ஹூசைன், மொசத்தேக் ஹூசைன், மகமுதுல்லா, மெஹதி ஹசன், முகமது சைஃபுதின், ஹசன் மகமுத், முஸ்தபிசுர் ரஹ்மான், டஸ்கின் அகமது. நசும் அகமது, சபிர் ரஹ்மான், மெஹதி ஹசன் மிராஸ், இபாதத் ஹூசைன், பர்வேஸ் ஹூசைன், நூருல் ஹசன்

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Asia cup 2022 – Bangladesh squad announced – Shakib al Hasan named captain ஆசிய கோப்பை 2022 - 17 புலிக்குட்டிகளை களமிறக்கும் வங்கதேசம்.. 5 ஆண்டுக்கு பிறகு கேப்டனாகும் ஷகிபுல்
Story first published: Saturday, August 13, 2022, 23:04 [IST]
Other articles published on Aug 13, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X