For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பையில் கலக்கிய 4 இந்திய வீரர்கள்.. இந்திய வீரர்களின் ரிப்போர்ட் கார்ட் இதோ

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் செயல்பாடு ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை தந்தாலும் சில வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

குறிப்பாக இந்திய அணியை விட்டு நீக்க வேண்டும் என விராட் கோலிக்கு எதிராக பலரும் குரல் கொடுத்த நிலையில் தற்போது நடப்பு ஆசிய கோப்பை தொடரிலே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

நடப்பு தொடரில் ஒரு அளவிற்கு சிறப்பாக விளையாடி இந்திய அணியின் மானத்தை காப்பாற்றிய நான்கு வீரர்கள் குறித்து தற்போது காணலாம்.

விராட் கோலியின் சதத்தால் ராகுலுக்கு ஆபத்து.. ? பிளேயிங் லெவனில் யார் இடம் பறிபோகும்.. பரபர தகவல் விராட் கோலியின் சதத்தால் ராகுலுக்கு ஆபத்து.. ? பிளேயிங் லெவனில் யார் இடம் பறிபோகும்.. பரபர தகவல்

விராட் கோலி

விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆசிய கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 276 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அதிகபட்சமாக 122 ரன்கள் விளாசி இருக்கிறார். இதில் விராட் கோலியின் சராசரி 92 ஆகும். ஸ்டிரைக் ரேட் 147 என்ற அளவில் வைத்துள்ளார். இந்த தொடரில் விராட் கோலி ஒரு சதம், இரண்டு அரை சதம் விலாஸ் இருக்கிறார். டி20 அணியில் இருந்து விராட் கோலியை நீக்க வேண்டும் என பலரும் போர் கொடி தூக்கிய நிலையில் தனது பேட் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் கிங்கோலி. ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலியின் செயல்பாட்டுக்கு பத்துக்கு எட்டு மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்.

சூரியகுமார் யாதவ்

சூரியகுமார் யாதவ்

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் 5 டி20 போட்டிகளில் விளையாடிய சூரியகுமார் யாதவ் மொத்தமாக 139 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார். அதிகபட்சமாக 68 ரன்களை அடித்துள்ள சூரியகுமார் யாதவ், சராசரியாக 34 ரன்களையும் ஸ்ட்ரைக் ரேட் 163 என்ற மிரட்டலான அளவிலும் வைத்திருக்கிறார். சூரியகுமார் யாதவ் பேட்டிங்கில் 8 சிக்ஸர்களும் 10 பவுண்டரிகளும் அடங்கும். சூரியகுமார் யாதவ் நடு வரிசையில் இந்திய அணிக்கு தூண் போல் செயல்பட்டாலும், சில முக்கிய ஆட்டத்தில் அதிரடியாக ஆடுகிறேன் என்று பெயரில் அவர் சொற்பரன்களில் ஆட்டம் இழப்பது ஒரு மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. 10க்கு சூரிய குமாரியாதவ் 7 மதிப்பெண்களை பெறுகிறார்

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

நடப்பாண்டில் டி20 போட்டிகளில் ரோகித் சர்மா சரிவர விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆசிய கோப்பை தொடரில் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். பேட்ஸ்மனாக சிறப்பாக செயல்பட்ட ரோகித் சர்மா இம்முறை கேப்டனாக பல சொதப்பல்களை முதன் முறையாக செய்திருக்கிறார். குறிப்பாக இலங்கைக்கு எதிராக பேட்டிங்கில் 72 ரன்கள் ரோகித் விளாசி இருக்கிறார். மொத்தமாக நான்கு போட்டிகளில் விளையாடி 133 ரன்கள் அடித்திருக்கும் ரோகித் 10 பவுண்டரிகளின் எட்டு சிக்சர்கள் அடித்து ஸ்ட்ரைக் ரைட்டை 151 என்ற அளவில் வைத்திருக்கிறார். பிளையிங் லெவனில் சரிவர தேர்வு செய்யாததால் ரோகித் இம்முறை பத்திற்கு 6 மதிப்பெண்களை பெறுகிறார்.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டராக விளங்கும் ஹர்திக் பாண்டியா ஆசிய கோப்பை தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடினார். குறிப்பாக லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் கலக்கிய ஹர்திக் பாண்டியா சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடம் டக் அவுட் ஆனார். பந்துவீச்சிலும் 44 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தார். இதேபோன்று இலங்கைக்கு எதிராகவும் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சும் பேட்டிங்கும் சரிவர எடுபடவில்லை. எனினும் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரர் என்ற பெயரை ஹர்திக் பாண்டியா மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். நடப்பு தொடரில் அவர் பத்துக்கு ஐந்து மதிப்பெண்களை பெறுகிறார்.

Story first published: Friday, September 9, 2022, 17:42 [IST]
Other articles published on Sep 9, 2022
English summary
Asia cup 2022 - Top 4 Performances in Indian Team and their report card ஆசிய கோப்பையில் கலக்கிய 4 இந்திய வீரர்கள்.. இந்திய வீரர்களின் ரிப்போர்ட் கார்ட் இதோ
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X