For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இலங்கையைச் சந்திக்கும் இந்தியா.. யுவராஜ், ரெய்னா "வெளுப்பார்களா"?

டெல்லி: கேப்டன் டோணி, ஷிகர் தவான், ரோஹித் சர்மா ஆகியோர் இன்றைய இலங்கைக்கு எதிரான ஆசியாக் கோப்பைப் போட்டியில் விளையாடுவார்களா என்பது சந்தேகமாக உள்ள நிலையில் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோரை வைத்து இந்திய அணி வியூகம் வகுத்துள்ளது.

ஒரு வேளை டோணி உள்ளிட்டோர் விளையாட முடியாமல் போனால், யுவராஜும், ரெய்னாவும்தான் அணியை கரை சேர்க்கும் பொறுப்பை சுமக்க வேண்டி வரும்.

வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் வென்றுள்ள இந்தியா , இன்றைய போட்டியில் இலங்கையையும் வெல்லும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

ரெய்னா - யுவராஜ்

ரெய்னா - யுவராஜ்

இன்றைய போட்டியில் ரெய்னாவும், யுவராஜும் முக்கிய வீரர்களாக இருப்பார்கள். இருவரும் டி 20 நிபுணர்கள் ஆவர். சாலிடாக ஆடக் கூடியவர்கள்.

முதல் இரு போட்டிகளில் சரியில்லை

முதல் இரு போட்டிகளில் சரியில்லை

இருப்பினும் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் இருவரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இருப்பினும் வாய்ப்பு கிடைத்து நின்று விட்டால் பிரித்து மேய்ந்து விடக் கூடிய திறமை படைத்தவர்கள்.

மயக்கும் மிர்பூர்

மயக்கும் மிர்பூர்

மிர்பூர் விக்கெட்டை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் ரெய்னா திணறுகிறார் என்பது உண்மைதான். இருப்பினும் அவரது அனுபவம் அணிக்கு உதவும்.

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

முதல் இரு போட்டிகளில் யுவராஜ் சி்ங் முறையே 15, 14 ஆகிய ரன்களையே எடுத்துள்ளார். இருப்பினும் நெருக்கடி நேரத்தில் சிறப்பாக ஆடக் கூடியவர் யுவராஜ் என்பதை மறுப்பதற்கில்லை.

காயத்தால் 3 பேருக்கு சிக்கல்

காயத்தால் 3 பேருக்கு சிக்கல்

டோணி, ஷிகர் தவான், ரோஹித் சர்மா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் இன்றைய போட்டியில் அவர்கள் விளையாடுவது சந்தேகம்தான். எனவே யுவராஜ் அதிரடியாக ஆடவேண்டும். ரெய்னா நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமாகியுள்ளது.

Story first published: Tuesday, March 1, 2016, 18:01 [IST]
Other articles published on Mar 1, 2016
English summary
As suspense prevails whether key players, including skipper Mahendra Singh Dhoni, Shikhar Dhawan and Rohit Sharma, would be making it to the Playing XI in today's (March 1) game against Sri Lanka, all eyes would be on experienced players in the side.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X