For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எகிறி அடித்த எமிரேட்ஸ்... மலைத்துப் போன மலிங்கா அன் கோ...!

மிர்பூர்: இதுதாங்க கிரிக்கெட்... ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இலங்கை இடையிலான ஆசியாக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை நேற்று பார்ததவர்கள் இப்படித்தான் கருதியிருப்பார்கள். எந்தப் புத்தில் எந்தப் பாம்பு இருக்குமோ என்ற கதையாக நேற்று இலங்கையை கலங்கடித்து விட்டது எமிரேட்ஸ் அணி. சற்று சுதாரிக்காமல் போயிருந்தால் இலங்கை அணி மண்ணைக் கவ்வியிருக்கும்.

அருமையான பந்து வீச்சால் இலங்கையை மிரட்டி விட்டது எமிரேட்ஸ் அணி. அதேபோல பேட்டிங்கிலும் இலங்கையை மிரள வைத்தனர் எமிரேட்ஸ் வீரர்கள். இதனால் 14 ரன்கள் வித்தியாசம் என்ற நூலிழையில்தான் இலங்கை அணி தப்பிப் பிழைத்தது.

வெறும் 129 மட்டுமே

வெறும் 129 மட்டுமே

முன்னதாக இலங்கை அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே எடுத்தது. சண்டிமால் மட்டுமே சிறப்பாக ஆடி அரை சதம் போட்டார். மற்றவர்கள் சொல்லிக் கொள்ளும்படி ஆடவில்லை.

115 ரன் வரை விரட்டி வந்த எமிரேட்ஸ்

115 ரன் வரை விரட்டி வந்த எமிரேட்ஸ்

பின்னர் பேட் செய்த எமிரேட்ஸ் அணி 9 விக்கெட்களை இழந்து 115 ரன் வரை எடுத்தது. இதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வென்றது.

சூப்பர் பந்து வீச்சு

சூப்பர் பந்து வீச்சு

முன்னதாக, எமிரேட்ஸ் அணியினர் பந்து வீச்சில் அசத்தி விட்டனர். அதேசமயம், பேட்டிங்கில் அவர்களது போதிய அனுபவமின்மையால் சின்ன ஸ்கோரை சேஸ் செய்யத் தடுமாறி தோல்வியில் வீழ்ந்தனர்.

ஸ்வப்னீல் பாட்டில்

ஸ்வப்னீல் பாட்டில்

எமிரேட்ஸ் அணியில் ஸ்வப்னீல் பாட்டில் சிறப்பாக பேட் செய்து சேஸ் செய்து பார்த்தார். 37 ரன்களைச் சேர்த்தார் அவர். மற்றவர்கள் சரிவர ஆடவில்லை.

மலிங்காவுக்கு 4

மலிங்காவுக்கு 4

எமிரேட்ஸ் அணியின் பேட்டிங்கை முறியடித்தது இலங்கை கேப்டன் லசித் மலிங்காவின் அருமையான பந்து வீச்சுதான். சிறப்பாக பந்து வீசிய அவர் 4 விக்கெட்களைச் சாய்த்தார். இதில் ஒரே ஓவரில் அவர் 2 விக்கெட்களைச் சாய்த்து எமிரேட்ஸை நிலை குலைய வைத்தார்.

Story first published: Friday, February 26, 2016, 10:10 [IST]
Other articles published on Feb 26, 2016
English summary
Sri Lanka overcame their batting failure with a disciplined bowling performance to beat United Arab Emirates by 14 runs in a round robin league encounter of the Asia Cup T20, here today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X