For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கங்குலி விஷயத்தில் வாயை விட்டு சிக்கிய பாக்.. ஆசிய கோப்பை விவகாரத்தில் செம ட்விஸ்ட்!

துபாய் : 2020 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓராண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Asia cup postponed to 2021 as Ganguly told

இதை இரு நாட்கள் முன்பே பிசிசிஐ தலைவர் கங்குலி வெளி உலகுக்கு கூறி இருந்தார். அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரி அது உண்மை இல்லை என கூறி பொங்கி இருந்தார்.

ஜஸ்ட் மிஸ்.. இந்தியா களமிறக்க நினைத்த இளம் ஆல் ரவுண்டர்.. 9 அணிகள் குறி வைக்கும் அந்த தமிழர்? ஜஸ்ட் மிஸ்.. இந்தியா களமிறக்க நினைத்த இளம் ஆல் ரவுண்டர்.. 9 அணிகள் குறி வைக்கும் அந்த தமிழர்?

சரியான தகவல்

சரியான தகவல்

தற்போது கங்குலி கூறியது தான் சரியான தகவல் என தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கும் இந்த விஷயம் முன்பே தெரியும் என கருதப்படுகிறது. எனினும், கங்குலிக்கு மறுப்பு கூறியது தற்போது கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் உலகம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. மார்ச் 13 முதல் எந்த சர்வதேச கிரிக்கெட் தொடரும் நடக்காமல் இருந்தது. ஜூலை 8 அன்று தான் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டி துவங்கி உள்ளது.

பாதுகாப்புக்கு நடுவே கிரிக்கெட்

பாதுகாப்புக்கு நடுவே கிரிக்கெட்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் கடும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புக்கு நடுவே நடைபெற்று வருகிறது. பல அணிகள் இன்னும் கிரிக்கெட் போட்டிகளில் ஆட தங்களை தயார் படுத்திக் கொள்ளவில்லை.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

இந்த நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2020 செப்டம்பர் மாதம் நடைபெற இருந்தது. அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை நடைபெற இருந்ததால் இந்த ஆண்டு ஆசிய கோப்பை டி20 தொடராக நடக்க இருந்தது. ஆனால், டி20 உலகக்கோப்பை நடப்பதும் சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது.

பாகிஸ்தான் - இலங்கை மாற்றம்

பாகிஸ்தான் - இலங்கை மாற்றம்

இந்த நிலையில், 2020 ஆசிய கோப்பையை நடத்த வேண்டிய பாகிஸ்தான், தங்கள் நாட்டில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்ற சூழல் இல்லை என்பதால் இலங்கைக்கு 2020 ஆசிய கோப்பை நடத்தும் உரிமையை அளித்தது.

2022 உரிமை

2022 உரிமை

அதற்கு பதில், 2022 ஆசிய கோப்பை உரிமையை இலங்கையிடம் இருந்து பாகிஸ்தான் பெற்றுக் கொண்டது. இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதால் அங்கே ஆசிய கோப்பையை நடத்த இலங்கை ஆர்வமாக இருந்தது.

ஆலோசனை

ஆலோசனை

எனினும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருப்பதால் இந்த சமயத்தில் பல்வேறு ஆசிய நாடுகளில் இருந்து வீரர்களை ஒன்று திரட்டி போட்டிகளை நடத்துவது கடினம் என்பதால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில், தொடரை தள்ளி வைப்பது குறித்து ஆலோசித்து வந்தது.

முடிவு யாருடையது?

முடிவு யாருடையது?

இந்த நிலையில், இரு நாட்கள் முன்பு கங்குலி அளித்த பேட்டி ஒன்றில் 2020 ஆசிய கோப்பை நடக்காது என்றார். அவர் கூறியதை கண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு பொங்கியது. ஆசிய கோப்பை குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தான் முடிவு எடுக்க வேண்டும். கங்குலி அல்ல என கூறினார் ஒரு அதிகாரி.

இது தெரியாதா?

இது தெரியாதா?

எனினும் தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் 2020 ஆசிய கோப்பையை ஓராண்டிற்கு தள்ளி வைத்து இருக்கிறது. ஜூன் 2021இல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கும் என அறிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு இந்த தகவல் முன்பே தெரியாதா? என தற்போது ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Story first published: Friday, July 10, 2020, 18:40 [IST]
Other articles published on Jul 10, 2020
English summary
Asia cup postponed to 2021 as Ganguly told earlier. Did PCB didn’t know about it?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X