For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பைனலுக்கு மறக்காம வந்திருங்க.. கணக்கைத் தீத்துக்குவோம்.. அழைக்கிறார் "மாப்பிள்ளை" மாலிக்!

மிர்பூர்: ஆசியாக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதவேண்டும். அப்போதுதான் பழையக் கணக்கை சரி செய்ய முடியும் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் சோயப் மாலிக்.

இந்தியாவுடன் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தாலும் கூட, அடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் நடந்த போட்டியில் மாலிக் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 63 ரன்களால் அந்த அணி நல்ல வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில் இறுதிப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோத வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார் மாலிக்.

சூழலுக்கேற்ப தயாராகவில்லை

சூழலுக்கேற்ப தயாராகவில்லை

இதுகுறித்து மிர்பூரில் பாகிஸ்தான் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாங்கள் மிர்பூர் சூழலுக்குத் தயாராகவில்லை. இதனால்தான் முதல் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைய நேரிட்டு விட்டது.

பிட்ச்சை சரியாக கணிக்கவில்லை

பிட்ச்சை சரியாக கணிக்கவில்லை

நாங்கள் பிட்ச்சை சரியாக கணிக்கவில்லை. சூழலை சரியாக புரிந்து கொள்ளவில்லை. அட்டாக்கிங் ஷாட்களில் நாங்கள் சரியாக ஆடவில்லை.

ஏமாற்றம்தான்

ஏமாற்றம்தான்

எல்லோருமே இந்தியாவிடம் தோற்றுப் போனதால் ஏமாற்றமடைந்தோம். இருப்பினும் மீதமுள்ள போட்டிகளில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற ஆர்வமாக இருக்கிறோம்.

இந்தியாவும் வர வேண்டும்

இந்தியாவும் வர வேண்டும்

இந்தியாவும் இறுதிப் போட்டிக்கு வர வேண்டும். அங்கு வைத்து நாங்கள் அவர்களை வென்று கணக்கை சரி செய்வோம் என்றார் மாலிக்.

Story first published: Tuesday, March 1, 2016, 16:03 [IST]
Other articles published on Mar 1, 2016
English summary
Pakistan's most experienced batting all-rounder Shoaib Malik's unbeaten 63-run-knock helped his side register its first victory in the Asia Cup T20 tournament. The side is trying to move on
 after the forgettable loss against India in their first game and is keen for a rematch with the arch-rivals in the finals to seek revenge of the humiliation.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X