For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோஹ்லி வறுவல்.. யுவராஜ் சிங் பொறியல்...சிக்கி சிதைந்த இலங்கை!

மிர்பூர்: விராத் கோஹ்லியின் அதிரடி ஆட்டம், யுவராஜ் சிங்கின் அனுபவ ஆட்டம், கேப்டன் டோணியின் வியூகம் என நேற்று இலங்கையை வீழ்த்திய இந்திய அணிக்கு சந்தோஷப்பட நிறைய சமாச்சாரங்கள் உள்ளன.

ஆசியாக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கும் நேற்றைய வெற்றியின் மூலம் தகுதி பெற்று விட்டது இந்தியா. அடுத்தடுத்து 3 வெற்றிகளை அட்டாக்கிங்காக பெற்றுள்ள இந்தியாவின் பேட்டிங் நேற்று பிரமாதமாக இருந்தது.

கிடைத்த பிட்ச்சை வைத்து விளையாடுவோம் என்று முன்பே கூறியிருந்தார் இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி. ஆனால் ஆசியாக் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் ஆட்டத்தைப் பார்த்து பிட்ச்சே பிரமித்துப் போயிருக்கும்.

5

5

நேற்றைய இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றி பெற்றது. முக்கிய ஹைலைட் விராத் கோஹ்லி போட்ட ஆட்டமிழக்காத அரை சதம்.

3

3

இந்திய அணிக்கு இது தொடர்ச்சியான 3வது வெற்றியாகும். முதல் போட்டியில் வங்கதேசத்தையும், 2வது போட்டியில் பாகிஸ்தானையும் இந்தியா வீழ்த்தியிருந்தது.

6

6

மார்ச் 6ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. அதில் இந்தியா யாருடன் மோதும் என்று தெரியவில்லை. இருப்பினும் வங்கதேசம் அல்லது பாகிஸ்தானுடன் மோதும் வாய்ப்புண்டு. இப்போதைக்கு வங்கதேசத்திற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.

3

3

இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் மார்ச் 3ம் தேதி அதாவது நாளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

138

138

நேற்றைய போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களை எடுத்தது.

19.2

19.2

அடுத்து ஆடிய இந்தியா வெற்றி இலக்கை அடைய 19.2 ஓவர்களை எடுத்துக் கொண்டது. 5 விக்கெட்களை இழந்து 4 பந்துகளை மீதம் வைத்து அது வெற்றி பெற்றது.

56

56

விராத் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 47 பந்துகளைச் சந்தித்து 56 ரன்களைக் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

35

35

இருப்பினும் யுவராஜ் சிங்தான் தீயை முதலில் பற்ற வைத்தவர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனுபவ வீரர் யுவராஜ் சிங் 18 பந்துகளில் 35 ரன்களைக் குவித்தார். இதில் 3 சிக்ஸர்களும், 2 பவுண்டரிகளும் அடக்கமாகும்.

51

51

யுவராஜ் சிங்கும், விராத் கோஹ்லியும் இணைந்து 5.4 ஓவர்களில் 51 ரன்களைக் குவித்து அசத்தினர்.

2-2-2

2-2-2

முன்னதாக இந்திய அணி பவுலிங்கின்போது இளம் வீரர்கள் பாண்ட்யா, பும்ரா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். அஸ்வினின் பங்கும் 2 விக்கெட்கள் ஆகும். அனுபவ வீரர் ஆசிஷ் நெஹ்ரா வழக்கம் போல சிறப்பாக பந்து வீசி 1 விக்கெட் சாய்த்தார்.

6

6

நேற்றைய வெற்றியின் மூலமாக ஆசியாக் கோப்பை இறுதிப் போட்டிக்கு 6வது முறையாக இந்தியா தகுதி பெற்று அசத்தியுள்ளது.

Story first published: Wednesday, March 2, 2016, 11:16 [IST]
Other articles published on Mar 2, 2016
English summary
India tonight (March 1) stormed into the final of the Asia Cup Twenty20 cricket tournament with another comfortable five-wicket victory over Sri Lanka, riding on Virat Kohli's unbeaten half-century.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X