For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்பாடா.. எமிரேட்ஸைப் போட்டுத் தாக்கி வெற்றிப் பெருமூச்சு விட்ட பாகிஸ்தான்!

மிர்பூர்: பாகிஸ்தான் அணிக்கு சற்று நிம்மதி கிடைத்துள்ளது. இந்தியாவிடம் பெற்ற மிகப் பெரியதோல்வி கொடுத்த பாதிப்பிலிருந்து மீளாத நிலையில் இருந்த அவர்களுக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸிடம் கிடைத்துள்ள வெற்று சற்று நம்பிக்கையைத் தந்திருக்கும் என நம்பலாம்.

"டாப் ஆர்டர்" வீரர்கள் சற்று சொதப்பினாலும் கூட பின்னால் வந்தவர்கள் சமாளித்து ஆடி பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எமிரேட்ஸை வெல்ல உதவினர்.

[படங்கள்]

முதல் போட்டியில் இந்தியாவிடம் படு தோல்வியை அடைந்திருந்தது பாகிஸ்தான். நேற்று நடந்த போட்டியில் அது எமிரேட்ஸை வீழ்த்தியது.

அபாரமாக ஆடிய உமர் அக்மல் - சோயப் மாலிக்

அபாரமாக ஆடிய உமர் அக்மல் - சோயப் மாலிக்

சோயப் மாலிக்கும், உமர் அக்மல்லும் சிறப்பாக ஆடினர். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றனர்.

114 ரன் பார்ட்னர்ஷிப்

114 ரன் பார்ட்னர்ஷிப்

இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 114 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர்.சோயப் மாலிக் 63 ரன்களும், உமர் அக்மல் 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

18.4 ஓவர்களிலேயே

18.4 ஓவர்களிலேயே

130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சேஸிங் செய்து வந்த பாகிஸ்தான் 18.4 ஓவர்களில் அந்த இலக்கை எட்டி வெற்றியும் பெற்றது.

129 ரன்கள் சேர்த்த எமிரேட்ஸ்

129 ரன்கள் சேர்த்த எமிரேட்ஸ்

முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 129 ரன்களை எடுத்தது. ஆரம்பத்திலிருந்தே அந்த அணி தடுமாறியபடி இருந்தது. முதல் நான்கு ஓவர்களில் அது 3 விக்கெட் இழப்புக்கு 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

சைமான் அன்வர்

சைமான் அன்வர்

எமிரேட்ஸ் அணியில் சிறப்பாக ஆடியவர் சைமான் அன்வர்தான். 42 பந்துகளில் 46 ரன்களை அவர் குவித்தார். இதில்ஐந்து பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடக்கமாகும்.

அதிரடி கேப்டன்

அதிரடி கேப்டன்

கேப்டன் அம்ஜத் ஜாவேத் 18 பந்துகளைச் சந்தித்து 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன், 27 ரன்களைக் குவித்து அணியின் ரன் சேர்க்கைக்கு உதவினார்.

Story first published: Tuesday, March 1, 2016, 14:50 [IST]
Other articles published on Mar 1, 2016
English summary
Pakistan survived a top-order collapse before completing a seven-wicket win over United Arab Emirates in their second round robin league match of the Asia Cup T20 tournamentpakistan-win-vs-uae-2027927.html
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X