“அவர் எங்கப்பா டீம்ல காணோம்..” ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி.. முன்னாள் வீரர் கடும் விளாசல் - விவரம்

மும்பை: ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடும் அதிருப்தியடைந்துள்ளார்.

ஆசியக்கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இறுதிப்போட்டி செப்டம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது.

இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

முடிவுக்கு வந்தது காமன்வெல்த் போட்டிகள்.. பதக்க மழை பொழிந்த இந்தியர்கள்.. மொத்தம் எத்தனை பதக்கங்கள்? முடிவுக்கு வந்தது காமன்வெல்த் போட்டிகள்.. பதக்க மழை பொழிந்த இந்தியர்கள்.. மொத்தம் எத்தனை பதக்கங்கள்?

இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணி அறிவிப்பு

ஆசியக்கோப்பை போன்ற பெரிய தொடருக்காக நீண்ட நாட்களாக வீரர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் தற்போது பிசிசிஐ தேர்வு செய்துள்ள பவுலிங் படை ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் காயத்தால் பாதிக்கப்பட்டதால், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

சீனியர்கள் புறக்கணிப்பு

சீனியர்கள் புறக்கணிப்பு

இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் மட்டுமே அனுபவம் மிகுந்த வீரராக இருக்கிறார். முன்னணி வீரர்களான முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் இருக்கும் சூழலில் அவர்களை புறக்கணித்துவிட்டு, அனுபவமே இல்லாத இரண்டு வீரர்களை நம்பி பிசிசிஐ களமிறக்குகிறது. இதனால் ரசிகர்கள் விமர்சனங்களை கொட்டித்தீர்த்து வருகின்றனர்.

ஆகாஷ் சோப்ரா பதில்

ஆகாஷ் சோப்ரா பதில்

இந்நிலையில் முன்னாள் வீரர் ஆவேஷ் கானும் அதில் இணைந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஏன் முகமது ஷமியை அனைவரும் மறந்தனர்? ஐபிஎல் தொடரில் அவரின் ரெக்கார்ட்கள் அட்டகாசமாக உள்ளன. ஷமி மற்றும் ஆவேஷ் கான் இடையே போட்டி நடந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஷமியை தேர்வு செய்யலாம்.

ஷமி ஏன் வேண்டும்?

ஷமி ஏன் வேண்டும்?

ஆவேஷ் கானை நான் குறைக்கூறவில்லை. ஆனால் பும்ரா போன்ற வீரர் இல்லாத சமையத்தில், புதிய பந்துகளை கையாள முகமது ஷமி போன்ற வீரரை தான் தேர்வு செய்திருக்க வேண்டும். அது கவலையளிக்கிறது. இதே போல குல்தீப் யாதவ் இருக்கையில் ரவி பிஷ்னாய் தேர்வு செய்யப்பட்டிருப்பதும் ஆச்சரியமாக உள்ளதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Asiacup 2022: Aakash chopra upset over BCCI excluded Mohammed shami in India squad
Story first published: Tuesday, August 9, 2022, 12:20 [IST]
Other articles published on Aug 9, 2022

Latest Videos

    + More
    POLLS
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Yes No
    Settings X