For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெயிட் குறையனுமா.. வங்கதேசத்துடன் விளையாடுங்க!

By Staff

சிட்டகாங்க்: டயட் இருப்பது, பயிற்சிகள் செய்வது என்று என்ன செய்தும் உங்கள் உடல் எடை குறையலையா. கவலையே வேண்டாம், நேராக வங்கதேசத்துக்கு சென்று, அந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடுங்க உடல் எடை குறைவுக்கு நாங்க கேரண்ட்டி..

நம்பவில்லை என்றால், ஆஸ்திரேலிய வீிரர் ஹேண்ட்ஸ்காம்ப்பிடம் கேளுங்க. அவர், இரண்டரை மணி நேரத்தில், 4.5 கிலோ எடை குறைத்துள்ளார்.

அது எப்படி சாத்தியம் என்ற உங்க கேள்வி புரிகிறது. தொடர்ந்து படியுங்க.

வங்கதேசத்தில் ஆஸி.

வங்கதேசத்தில் ஆஸி.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, வங்கதேசத்துக்கு சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் வென்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் வெற்றியை வங்கதேசம் பதிவு செய்தது.

2வது போட்டி டிரா

2வது போட்டி டிரா

இரண்டாவது போட்டி நேற்று முடிந்தது. இதில் ஆஸ்திரேலியா வென்று, தொடரை டிரா செய்தது. இந்த போட்டியின்போதுதான், ஆஸ்திரேலிய வீரர் ஹேண்ட்ஸ்காம்ப் அதிக வெப்பத்தின் காரணமாக, 4.5 கிலோ எடை குறைந்தார்.

வெயில் பாஸ்

வெயில் பாஸ்

ஆசியாவில் நிலவும் அதிகமாக வெப்பத்தை ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து வீரர்களால் தாங்கி கொள்ள முடியாது. போட்டி நடக்கும் சிட்டகாங்கில் வெயில் கொளுத்தி வருகிறது.

தலையில் துண்டைப் போட்டு

தலையில் துண்டைப் போட்டு

பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், முதல் இன்னிங்ஸில், 144 பந்துகளில், 82 ரன்கள் எடுத்தார். அதில், 8 பவுண்டரிகளும் அடங்கும். மூன்றாம் நாளில் மத்திய உணவு இடைவேளைக்குப் பிறகு, இரண்டரை மணி நேரம் அவர் மைதானத்தில் இருந்தார். நடுநடுவே, தலையில் துண்டைப் போட்டுக் கொள்வது, ஐஸ் பேக் வைத்துக் கொள்வது என்று சமாளித்து பார்த்தார். கடைசியில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

முடியலய்யா

முடியலய்யா

வீரர்களுக்கான அறைக்கு சென்றவர், உடல் சோர்ந்து போயிருந்தார். உடல் எடையை சோதித்து பார்த்தபோது இரண்டரை மணி நேரத்தில் 4.5 கிலோ குறைந்திருந்தது தெரியவந்தது.

வாங்கடி வாங்க!

வாங்கடி வாங்க!

ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக இந்தியாவுக்கு வருகிறது. எத்தனை பேருக்கு எவ்வளவு கிலோ உடல் எடையை குறையப் போகிறது என்று பார்ப்போம்.

Story first published: Friday, September 8, 2017, 18:31 [IST]
Other articles published on Sep 8, 2017
English summary
Australian cricket player lost 4.5 kgs, during the Test match against Bangladesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X