உலகக்கோப்பையில் சாதனை சதம் அடித்த வார்னர்.. தெறித்த வங்கதேசம்.. ஆனா டபுள் செஞ்சுரி மிஸ் ஆயிடுச்சே!

நாட்டிங்ஹாம் : வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் அதிரடி சதம் அடித்து புதிய உலகக்கோப்பை சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா - வங்கதேசம் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி நாட்டிங்ஹாம் நகரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 381 ரன்கள் குவித்து வங்கதேச பந்துவீச்சை சிதற அடித்தது. ஆஸ்திரேலியா இத்தனை பெரிய ஸ்கோர் அடிக்க முக்கிய காரணம் டேவிட் வார்னர்.

அபார ஆட்டம்

அபார ஆட்டம்

டேவிட் வார்னர் அபாரமாக பேட்டிங் செய்து சதம் கடந்து அசத்தினார். இந்தப் போட்டியில் நிதானமாக ஆடத் தொடங்கிய வார்னர், சதம் அடித்த பின்னர் வேகம் எடுத்து வங்கதேச பந்துவீச்சை புரட்டி எடுத்தார். சிறப்பாக ஆடிய அவர் 147 பந்துகளில் 166 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர், 14 ஃபோர் அடங்கும்.

16வது சதம்

16வது சதம்

வார்னர் 2019 உலகக்கோப்பை தொடரில் தன் இரண்டாவது சதத்தை அடித்து இருக்கிறார். மேலும், ஒருநாள் போட்டிகளில் இது வார்னரின் 16வது சதம் ஆகும். 94 இன்னிங்க்ஸ்களில் 16வது சதத்தை எட்டி இருக்கிறார். விராட் கோலியும் 94 இன்னிங்க்ஸ்களில் தான் 16வது சதத்தை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு முறை

இரண்டு முறை

வார்னர் உலகக்கோப்பை போட்டிகளில் இரண்டு முறை 150-க்கும் மேல் ரன் குவித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை செய்தார். முன்னதாக 2015 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 178 ரன்கள் குவித்து இருந்தார்.

இரட்டை சதம் பறிபோனது

இரட்டை சதம் பறிபோனது

166 ரன்கள் குவித்த வார்னர், 34 ரன்களில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். இது வரை உலகக்கோப்பை தொடர்களில் இரண்டு முறை மட்டுமே இரட்டை சதம் அடிக்கப்பட்டுள்ளது. 2015 உலகக்கோப்பை தொடரில் கிறிஸ் கெயில், மார்டின் குப்டில் இரட்டை சதம் அடித்து இருந்தனர்.

வார்னர் ரன் குவிப்பு

வார்னர் ரன் குவிப்பு

வார்னர் இந்த உலகக்கோப்பை தொடரில் ஓராண்டு தடைக்குப் பின் பங்கேற்று உள்ளார். தடையில் இருந்து வந்தாலும் அதே பார்மில் தான் இருக்கிறார் வார்னர். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 89 ரன்கள், பாகிஸ்தான் அணிக்கு எதிரான 107 ரன்கள், இந்திய அணிக்கு எதிராக 56 ரன்கள் என ரன் குவிப்பில் ஈடுபட்டு இருக்கிறார் வார்னர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
AUS vs BAN Cricket World cup 2019 : David Warner creates records with his century
Story first published: Thursday, June 20, 2019, 22:22 [IST]
Other articles published on Jun 20, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X