For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த தமிழக வீரர்தான் கேம் சேஞ்சர்.. பயந்து நடுங்கும் ஆஸி. பேட்ஸ்மேன்கள்.. பரபரக்கும் களம்.. பின்னணி

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் அஸ்வின்தான் கேம் சேஞ்சராக இருப்பார் என்று கூறுகிறார்கள்.

Recommended Video

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. உமேஷ்க்கு பதில் நடராஜன்.. பிசிசிஐ அறிவிப்பு..!

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் தற்போது முடிந்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக வெற்றிபெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரஹானே இருந்தார்.

 சிட்னி

சிட்னி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் அஸ்வின்தான் கேம் சேஞ்சராக இருப்பார் என்று கூறுகிறார்கள். இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக்க உள்ளது. ஸ்பின் பவுலிங்கிற்கு இந்த பிட்ச் சாதகமாக இருக்கும் என்பதால் அஸ்வின் மிக முக்கியமான வீரராக இருப்பார் என்று கூறுகிறார்கள.

பிட்ச்

பிட்ச்

ஆனால் பிட்ச்சையும் தாண்டி அஸ்வின் இந்த போட்டியில் கேம் சேஞ்சராக உருவாக வேறு சில காரணங்களும் இருக்கிறது. முதல் விஷயம், அஸ்வினின் ஸ்பின் பவுலிங்கில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அஸ்வின் தற்போது மிக சிறப்பாக ஸ்பின் பவுலிங் செய்து வருகிறது. 4.2 டிகிரிக்கும் அதிகமாக அஸ்வின் தனது பந்தை ஸ்பின் செய்து வருகிறார்.

அஸ்வின் ஸ்பின்

அஸ்வின் ஸ்பின்

அதே சமயம் தேவைப்படும் நேரங்களில் 2 டிகிரிக்கும் குறைவாக ஸ்பின் செய்யும் வித்தையையும் அஸ்வின் கற்றுள்ளார். அஸ்வின் பவுலிங்கில் முதல்முறை ஸ்மித் அவுட்டாக காரணம் கொஞ்சம் கூட ஸ்பின் ஆகாத பவுலிங்தான். ஆனால் ஸ்மித்தின் இரண்டாவது விக்கெட்டை அஸ்வின் மிக சிறப்பான ஸ்பின் மூலம் எடுத்தார். இங்குதான் அஸ்வின் முக்கியமான வீரராக உருவெடுக்கிறார்.

திணறல்

திணறல்

அஸ்வின் தற்போது புதிய பந்திலேயே நன்றாக பந்தை ஸ்விங் செய்கிறார். இதனால் ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அஸ்வினின் ஸ்பின் பவுலிங்கில் கடுமையாக திணறுகிறார்கள். மார்னஸ், ஸ்மித், ஜோ பர்ன்ஸ் என்று முக்கியமான வீரர்கள் எல்லோரும் கடுமையாக திணறுகிறார்கள். அஸ்வின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியவில்லை என்று மார்னஸ் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வின்

அஸ்வின்

களத்தில் அஸ்வின்தான் என்னை ஆட்டிப்படைக்கிறார் என்று ஸ்மித்தும் குறிப்பிட்டுள்ளார். அந்த அளவிற்கு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலான வீரராக அஸ்வின் உருவெடுத்துள்ளார். அஸ்வினுக்கு வைக்கப்படும் பீல்டிங் செட்டப்பும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து உள்ளது.

பயிற்சி

பயிற்சி

இதனால் ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்கள் மிக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அஸ்வினின் பவுலிங்கை எதிர்கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அடுத்த போட்டியில் அஸ்வினின் பவுலிங் எப்படி இருக்கும் என்பதை பொறுத்தே ஆட்டத்தின் முடிவும் இருக்கும் என்கிறார்கள்.

Story first published: Friday, January 1, 2021, 15:32 [IST]
Other articles published on Jan 1, 2021
English summary
AUS vs IND: Spin bowler Ashwin will be the game changer in the 3rd test against Australia.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X