For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆர்வமே இல்லாத பும்ரா.. கோலி சொல்வதை கூட கேட்பதில்லையா?.. நேற்று நடந்த சம்பவம்.. பரபர பின்னணி!

சிட்னி: இந்திய அணியின் முன்னணி பவுலர் பும்ரா ஆர்வமே இன்றி பவுலிங் செய்வது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. இந்திய அணிக்கு சின்ன இடம் கூட கொடுக்காமல் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை அடித்து துவைத்து உள்ளது.

3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்று இழந்துள்ளது. இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பவுலிங்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

காயத்தால் அவதி... ஒருநாள், டி20 தொடர்கள்ல வெளியேற்றம்.. டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம்! காயத்தால் அவதி... ஒருநாள், டி20 தொடர்கள்ல வெளியேற்றம்.. டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம்!

காரணம்

காரணம்

முக்கியமாக இந்திய அணியின் முன்னணி பவுலர் பும்ரா இந்த தொடரின் இரண்டு போட்டிகளிலும் சரியாக பந்து வீசவில்லை. சரியான லெந்தில் அவர் பந்து வீசவில்லை. யார்க்கர் கூட போட முடியாமல் பும்ரா சிரமப்பட்டார். அதோடு இவரின் பவுலிங் வேகமும் குறைந்துள்ளது.

வேகம்

வேகம்

முக்கியமாக முதல் பவர்பிளேவில் இவர் அதிக யார்க்கர்களை வீசுவார். துல்லியமாக பவுலிங் செய்து ரன் செல்வதை கட்டுப்படுத்துவார். ஆனால் இந்த தொடரில் பும்ராவிடம் அந்த பும் பும் மேஜிக் காணவில்லை. பும்ரா களத்தில் கொஞ்சம் கூட ஆர்வமே இன்றி காணப்படுகிறார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

ஆர்வம் இல்லை

ஆர்வம் இல்லை

முக்கியமாக நேற்று பவுலிங் செய்த போது பும்ரா கொஞ்சம் ஆர்வம் இன்றி காணப்பட்டார். பொதுவாக பும்ரா லென்த் மாறி பவுலிங் செய்யும் போது ரோஹித் சர்மா அவருக்கு அறிவுரை வழங்குவார். அதன்பின் பும்ரா நன்றாக வீசுவார். ஆனால் இப்போது ரோஹித் சர்மாவும் அணியில் இல்லை.

கோலி

கோலி

கோலியும் பெரும்பாலும் ரோஹித் சர்மாவிற்கு அறிவுரை வழங்குவது இல்லை. அப்படியே கோலி அறிவுரை சொன்னாலும் அதை பும்ரா கேட்பது இல்லை என்று கூறுகிறார்கள். ஆம், நேற்று கோலி வந்து பேசுகிறார், ஆனால் பும்ரா கோலியிடம் வாதம் செய்கிறார் என்று சில கிரிக்கெட் விமர்சகர்கள் புகார் வைத்துள்ளனர். ரோஹித் இல்லாத கடுப்பில் இந்திய அணியில் ஒரு குழு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

உண்மை என்ன

உண்மை என்ன

ஆனால் ஐபிஎல் மோதல் எல்லாம் வெளியேதான். இந்திய அணிக்குள் அப்படி மோதல் எதுவும் இல்லை. கோலி மீது பும்ராவிற்கு கோபம் எல்லாம் இல்லை என்றும் கூறுகிறார்கள். பும்ரா பார்ம் அவுட்டில் இருக்கிறார். அதுதான் சிக்கல். விரைவில் அவர் பார்மிற்கு திரும்புவார். ஆஸ்திரேலிய பிட்ச் அவருக்கு இன்னும் கை கொடுக்கவில்லை. டெஸ்ட் தொடரில் எப்படியும் பும்ரா பார்மிற்கு திரும்புவார் என்கிறார்கள்.

Story first published: Monday, November 30, 2020, 14:29 [IST]
Other articles published on Nov 30, 2020
English summary
AUS vs IND: Bumrah performance in not up to the mark under Kohli captaincy during Aussie one day series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X