For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனிதான் அப்படி ஆட சொன்னார்.. கண்ணை மூடினால் தூங்க கூட முடியவில்லை.. ஜடேஜா பரபர பேட்டி!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு பின் தூங்கவே இல்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றிபெற்றது. ஜடேஜா - பாண்டியா ஜோடி போட்டி அடித்து வெளுத்த காரணத்தால் இந்திய அணி நேற்று வெற்றிபெற்றது. நேற்று ஹர்திக் பாண்டியா 76 பந்தில் 92 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 50 பந்தில் அதிரடியாக ஆடி 66 ரன்கள் எடுத்தார்.

இதனால் இந்திய அணி 302 ரன்கள் எடுத்தது. 49.2 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டையும் இழந்து 289 ரன்கள் எடுத்தது.

இந்தியா - ஆஸி. டி20 தொடர்.. போட்டி அட்டவணை.. வீரர்கள் பட்டியல்.. போனில் பார்ப்பது எப்படி?இந்தியா - ஆஸி. டி20 தொடர்.. போட்டி அட்டவணை.. வீரர்கள் பட்டியல்.. போனில் பார்ப்பது எப்படி?

பேட்டி

பேட்டி

இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் தொடர் குறித்து ஜடேஜா பேட்டி அளித்துள்ளார். அதில், ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடுவதும், இங்கு விக்கெட் எடுப்பதும் மிகச் சிறந்த உணர்வை தருகிறது. ஆஸ்திரேலிய அணி மிகவும் வலிமையான அணி. அவர்களை அவர்களின் சொந்த மண்ணில் கூட எதிர்கொள்வது இகவும் சிறப்பான விஷயம். முதல் இரண்டு போட்டிகளில் நாங்கள் சரியாக ஆடவில்லை.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் கடைசி போட்டியில் வெற்றிபெற்று இருக்கிறோம். இதே மனநிலையோடு நாங்கள் டி 20 தொடரிலும் களமிறங்குவோம். இது எங்களுக்கு பெரிய உறுதுணையாக இருக்கும். இரண்டாவது போட்டியில் நான் கேட்ச் விட்டேன். அதன்பின் எனக்கு தூக்கமே வரவில்லை. அதை பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தேன். கண்ணை மூடினால் தூங்க கூட முடியவில்லை.

இனிமேல் கேட்ச்

இனிமேல் கேட்ச்

இனிமேல் எனது கைக்கு கேட்ச் வந்து, அதை 50% தான் பிடிக்க முடியும் என்றாலும் கூட பிடித்து விட வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். இதற்காக கூடுதல் பயிற்சிகளை செய்தேன்.எனக்கு தோனி நிறைய கற்றுக்கொடுத்து இருக்கிறார். சென்னை மற்றும் இந்திய அணி இரண்டிலும் தோனி எனக்கு நிறைய விஷயங்களை பாடமாக எடுத்து உள்ளார்.

கடைசி நேரம்

கடைசி நேரம்

முக்கியமாக கடைசி நேரம் வரை ஏன் களத்தில் நிற்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்துள்ளார். தோனிதான் என்னை இப்படி ஆட சொன்னது. கடைசி ஓவர் வரை நின்றால் கூடுதல் ரன் எடுக்கலாம் என்று கூறி இருக்கிறார். இதனால்தான் நாங்கள் நேற்று பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினோம்.

அப்படியே நடந்தது

அப்படியே நடந்தது

அவர் சொன்னது அப்படியே நடந்தது. அவருடன் பல முறை ஆடி இருக்கிறேன். அப்போது கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் இது. கடைசி ஒருநாள் போட்டியில் எனக்கு இந்த அனுபவம் பெரிய அளவில் உதவியது என்று ஜடேஜா குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Thursday, December 3, 2020, 11:26 [IST]
Other articles published on Dec 3, 2020
English summary
AUS vs IND: Couldn't sleep after losing the catch in 2nd ODI says Jadeja in post match presentation.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X