For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முறைத்தபடி ஓடினால் மட்டும் போதுமா?.. இப்போ பாருங்க என்ன ஆச்சுன்னு.. ஈகோவால் இந்திய அணிக்கு சிக்கல்!

டெல்லி: இந்திய அணியில் கேப்டன் கோலி நடந்து கொள்ளும் விதமும், மும்பை வீரர் சூர்ய குமார் யாதவ் அணியில் சேர்க்கப்படாததும்தான் தொடர் தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள்.

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தொடரின் தொடக்கத்தில் இந்திய அணி அதிகம் எதிர்பார்க்கப்பட்டாலும் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து இந்திய அணி பெரிய ஏமாற்றம் அளித்துள்ளது.

அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

 போட்டிக்கு முன் பறந்த போட்டிக்கு முன் பறந்த "கான்பிரன்ஸ் கால்".. ரோஹித்திடம் கோலி சொன்ன அந்த வார்த்தை.. ஆடிப்போன பிசிசிஐ!

எப்படி

எப்படி

இந்திய அணியில் கேப்டன் கோலி நடந்து கொள்ளும் விதமும், மும்பை வீரர் சூர்ய குமார் யாதவ் அணியில் சேர்க்கப்படாததும்தான் தற்போதைய தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் நன்றாக இருக்கிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியில் மயங்க் அகர்வாலை சேர்த்துள்ளனர்.

டெஸ்ட் வீரர்

டெஸ்ட் வீரர்

டெஸ்ட் அணியில் கலக்கும் மயங்க் அகர்வாலை இந்திய ஒருநாள் அணியில் சேர்த்து உள்ளனர். இதுதான் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. கே.எல் ராகுல் ஓப்பனிங் இறங்குவார் என்று கருதப்பட்ட நிலையில், மயங்க் அகர்வால் ஓப்பனிங் இறங்கி ஆடி வருகிறார். ஆனால் மயங்க் பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கவில்லை. இரண்டு போட்டிகளிலும் 50 ரன்கள் கூட எடுக்காமல் அவுட்டானார்.

மோசம்

மோசம்

இந்த நிலையில்தான் மயங்க் அகர்வாலுக்கு பதில் ராகுலை ஓப்பனிங் இறங்க செய்துவிட்டு, ராகுல் இறங்கும் 5வது இடத்தில் சூர்ய குமார் யாதவை களமிறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. ராகுல், தவான் ஓப்பனிங், கோலி, ஷ்ரேயாஸ், சூர்ய குமார் யாதவ், பாண்டியா என்று பேட்டிங் ஆர்டர் இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

முறைத்தார்

முறைத்தார்

ஐபிஎல் தொடரின் போது கோலி - சூர்ய குமார் யாதவ் இடையே சின்ன மோதல் வந்தது. அப்போது சூர்ய குமார் யாதவை முறைத்தபடி கோலி வேகமாக ஓடினார். இது பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் முறைத்துக்கொண்டு சுற்றுவது கேப்டனுக்கு அழகு இல்லை, நல்ல வீரர்களை அணியில் எடுத்து அணியை வெற்றிபெற வைப்பதே அழகு.

கோலி

கோலி

கோலி நல்ல கேப்டனாக செயல்பட வேண்டும். கோலியின் ஈகோவால் இந்திய அணிதான் தேவையில்லாமல் தோல்வி அடைகிறது. சூர்ய குமார் யாதவ் மேட்ச் வின்னர். அவர் இந்திய அணிக்கு தேவை.

இனிமேல்

இனிமேல்

இனியும் கோலி இப்படி முக்கிய வீரரை தேவையின்றி புறக்கணிக்க கூடாது. மும்பை வீரர் என்ற ஈகோ பார்க்காமல் கோலி சூர்ய குமாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இந்திய அணியின் தற்போதைய நிலையை பார்த்தாலே அணியின் மோசமான நிலை என்ன என்று தெரியுமென விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, November 30, 2020, 14:23 [IST]
Other articles published on Nov 30, 2020
English summary
AUS vs IND: Fans are asking Kohli to bring Surya Kumar Yadav to Team India soon.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X