For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்போதுதான் முடிந்தது.. அதற்குள் இன்னொன்றா? பெரிய பிரச்சனையில் சிக்கிய இந்திய அணி.. பின்னணி!

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரை இந்திய அணி இழந்துள்ள நிலையில் இந்திய அணியில் உருவாகி இருக்கும் புதிய பிரச்சனை குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகள் நடந்துள்ள நிலையில், இரண்டு போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்துவிட்டது.

இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-0 என்று இந்தியா இழந்துள்ளது.

பிரச்சனை

பிரச்சனை

இந்த நிலையில் இந்திய அணிக்குள் உருவாகி இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று குறித்த விவரம் வெளியாகி உள்ளது. கடந்த உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணியில் மிடில் ஆர்டர் மிகவும் மோசமாக இருந்தது. முக்கியமாக நான்காவது இடத்தில் ஆடக்கூடிய வீரர் யார் என்பதற்கான கேள்விகள் எழுந்தது. நான்காவது இடத்தில் இந்திய அணியில் ஆட சரியான வீரர் இல்லை.

வீரர் இல்லை

வீரர் இல்லை

இந்திய அணியில் நான்காவது இடத்தில் விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் களமிறக்கப்பட்டனர். ஆனால் அவர்களால் சரியாக ஆட முடியவில்லை. அதேபோல் நான்காவது இடத்தில் களமிறங்கி ஆடிய ரிஷப் பண்ட் பெரிய அளவில் இந்திய அணிக்கு வெற்றி தேடி தரவில்லை.

சிக்கல்

சிக்கல்

இந்த நிலையில்தான் இந்திய அணியில் தற்போது 4வது இடத்திற்கான பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது. 4 மற்றும் ஐந்தாவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் ஆகியோர் களமிறக்கப்பட்டு பேட்டிங் ஆர்டர் பிரச்சனை சரி செய்யப்பட்டு உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் பிரச்சனையை தீர்ந்துள்ள நிலையில் தற்போது புதிதாக பவுலிங் பிரச்சனை வந்துள்ளது.

பிரச்சனை

பிரச்சனை

இந்திய அணியில் தற்போது ஜடேஜாவையும் சேர்த்து 5 முழுநேர பவுலர்கள் மட்டுமே உள்ளனர். பாண்டியா பவுலிங் செய்யாத காரணத்தால் கூடுதல் பவுலர்கள் இல்லாமல் இந்திய அணி திணறி வருகிறது. 5 பவுலர், ஒரு ஆல்ரவுண்டர் பவுலர் இருந்தால் மட்டுமே சரியாக ஆட முடியும். ஆனால் இந்திய அணியில் ஆல் ரவுண்டர் பவுலிங் இல்லாமல் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதிய சிக்கல்

புதிய சிக்கல்

இதுவரை மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்சனையாக இருந்த நிலையில் தற்போது 6வது பவுலருக்கான பிரச்சனை உருவாகி உள்ளது. இதனால்தான் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணியின் பவுலிங் திணறியது. பாண்டியாவும் பெரிய அளவில் பவுலிங் போட விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால் இந்திய அணி நல்ல ஆல் ரவுண்டர் இல்லாமல் கஷ்டப்பட தொடங்கி உள்ளது.

Story first published: Tuesday, December 1, 2020, 10:35 [IST]
Other articles published on Dec 1, 2020
English summary
AUS vs IND: Indian facing issues inside the team due to 6th bowler option confusions.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X