மொத்தமாக திரும்பிய கேமரா.. ஸ்டன் ஆகி நின்ற 2 நாட்டு வீரர்கள்.. மைதானம் முழுக்க ஆரவாரம்.. செம சம்பவம்

சிட்னி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது மைதானத்தில் நடந்த சம்பவம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் முறை ரசிகர்கள் கூட்டத்தோடு இந்த தொடர் நடந்து வருகிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நடந்து வருகிறது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த போட்டியின் போது மைதானத்தில் நடந்த சம்பவம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இந்திய அணியில் கோலி, ஷ்ரேயாஸ் பேட்டிங் செய்து கொண்டு இருந்த போதுதான் இந்த சம்பவம் வந்தது. இந்திய ஆஸ்திரேலிய போட்டியை காண்பதற்காக மைதானத்திற்கு வந்து இருந்து ஜோடி ஒன்றை நோக்கி எல்லா கேமராக்களும் திரும்பியது.

செம

செம

இந்தியர் ஒருவரும், அவருடன் ஆஸ்திரேலிய பெண் ஒருவரும் உடன் இருந்தனர். கேமரா தன்னை நோக்கி திரும்பியதும், அந்த இந்திய இளைஞர் எழுந்து நின்று அந்த பெண்ணை பார்த்தார். அதன்பின் அந்த பெண்ணிற்கு முன் முட்டி போட்டி, அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்தார்.

உற்சாகம்

உற்சாகம்

தான் கொண்டு வந்திருத்த மோதிரத்தை காட்டி அந்த பெண்ணிடம் காதலை தெரிவித்தார். இதை பார்த்ததும் உற்சாகம் அடைந்த ஆஸ்திரேலிய பெண் காதலை ஒப்புக்கொண்டு அந்த இந்திய இளைஞரை கட்டிப்பிடித்தார். அந்த இளைஞரை முத்தமிட்டு காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்.

வைரல்

வைரல்

இந்த சம்பவம் அனைத்தும் பெரிய திரையில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது. களத்தில் இருந்த கோலி, மேக்ஸ்வெல் போன்ற எல்லோரும் இந்த அழகான சம்பவத்தை பார்த்தனர். மைதானம் மொத்தமாக ஆரவாரமாக குரல் எழுப்பியது.

உற்சாகம்

உற்சாகம்

அதிலும் மேக்ஸ்வெல் உற்சாகத்தில் கைதட்டி அந்த காதல் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதை பார்த்து அந்த ஜோடி வெக்கத்தில் நெளிந்தது .. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
AUS vs IND: Indian guy proposed to an Australian girl during the match and she said yes.
Story first published: Sunday, November 29, 2020, 16:12 [IST]
Other articles published on Nov 29, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X