For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த 4 மணி நேரம் 6 நிமிடம்.இந்திய அணியின் தொடர் தோல்விக்கு பின் இப்படி ஒரு காரணமா.சிக்கும் கோலி!

சிட்னி: ஒவ்வொரு ஓவருக்கும் இடையில் இந்திய வீரர்கள் சரியாக ஆட்டத்தில் கவனம் செலுத்துவது இல்லை, பீல்டர்கள் சரியாக நிற்க வைக்கப்படுவது இல்லை என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்று இழந்துள்ளது.

இந்திய அணியின் தோல்விக்கு நிறைய விஷயங்கள் காரணமாக கூறப்படுகிறது. இந்திய அணிக்கு சின்ன இடம் கூட கொடுக்காமல் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை அடித்து துவைத்து உள்ளது.

பிரச்சனை

பிரச்சனை

இந்திய அணியின் மிக முக்கியமான பிரச்சனையே ஓவருக்கு இடையில்தான் இருக்கிறது. ஓவருக்கு இடையில் இந்திய வீரர்கள் சரியாக ஆட்டத்தில் கவனம் செலுத்துவது இல்லை. ஓவருக்கு இடையில் உடனே திட்டங்களை வகுத்து பீல்டிங் நிற்க வைக்க வேண்டும். ஆனால் கோலி அதை செய்வது இல்லை.

பேட்ஸ்மேன்கள்

பேட்ஸ்மேன்கள்

பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறார். பவுலரும் கூட பவுலிங் செய்ய வருகிறார். ஆனால் பீல்டர்கள் தங்கள் இடங்களுக்கு செல்வது இல்லை. வீரர்கள் இங்கும், அங்கும் ஓடுகிறார்கள். ஓவருக்கு இடையில் அதிக நேரம் எடுப்பது இந்திய அணியைதான் பாதிக்கும்.

கேப்டன்

கேப்டன்

கேப்டன் சரியாக திட்டமிடாமல் களத்திற்கு வந்தால் இப்படித்தான் பீல்டிங் செட் செய்ய அதிக நேரம் எடுக்கும். கோலி இங்குதான் தவறு செய்து இருக்கிறார், என்று புகார்கள் வைக்கப்பட்டுள்ளது. யாருக்கு ஓவர் கொடுப்பது, எப்போது ஓவர் கொடுப்பது என்று தெரியாமல் கோலி களத்தில் நீண்ட நேரம் எடுக்கிறார். இதனால் இந்திய அணி பவுலிங் போடும்போது அதிக நேரம் ஆகிறது.

பேட்டிங்

பேட்டிங்

இந்திய அணி இரண்டு போட்டியிலும் 4 மணி நேரம் 6 நிமிடத்திற்கும் அதிகம் பவுலிங் செய்ய எடுத்துக்கொண்டது. இதுதான் இந்திய அணி செய்யும் தவறு. இதனால் ஆஸ்திரேலிய அணி எளிமையாக திட்டங்களை வகுக்கிறது. கோலி களத்திற்கு வந்துவிட்டு திட்டங்களை வகுக்கிறார். அது பெரிய தவறு.

முன்பே திட்டமிடல்

முன்பே திட்டமிடல்

முன்பே எப்படி பீல்டிங் செட் செய்ய வேண்டும். யாருக்கு எப்போது ஓவர் கொடுக்க வேண்டும் என்பது போன்ற திட்டங்களை கோலி வகுக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்வது இல்லை,. இந்திய அணி அதிக கேட்ச் மிஸ் செய்வதும், மிஸ் பீல்ட் செய்வதற்கும் இதுதான் காரணம் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, November 30, 2020, 18:13 [IST]
Other articles published on Nov 30, 2020
English summary
AUS vs IND: Indian players are not focussing on the fielding set up in between overs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X