For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எதுவும் பேசுவதே இல்லை.. அவரை இப்போது மிஸ் செய்கிறோம்.. தோனியால் இந்திய அணிக்கு வைக்கப்பட்ட செக்!

சிட்னி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில் தோனி இன்றி இந்திய அணி கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி கொஞ்சம் சரிவை சந்தித்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழந்துள்ள நிலையில் பிசிசிஐ அணி நிர்வாகம் இந்திய அணி மீது கோபத்தில் உள்ளது.

 எது நடக்க கூடாதுன்னு நினைத்தாரோ.. அது நடந்துவிட்டது.. கோலி எடுத்த முடிவு.. எவ்வளவு சிக்கல் பாருங்க! எது நடக்க கூடாதுன்னு நினைத்தாரோ.. அது நடந்துவிட்டது.. கோலி எடுத்த முடிவு.. எவ்வளவு சிக்கல் பாருங்க!

களத்தில் கேப்டன் மற்றும் வீரர்கள் எடுத்த தவறான முடிவுதான் இந்திய அணியின் தொடர் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

தோனி

தோனி

இந்த தொடரில் இந்திய அணி அதிகம் மிஸ் செய்யும் விஷயம் என்றால் அது தோனியின் கீப்பிங்தான். தோனி கீப்பிங் செய்யும் போது அவர் கேப்டனாக இல்லை என்றாலும் அணியை நன்றாக வழி நடத்துவார். பவுலர்களுக்கு எப்படி பவுலிங் போட வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பார்.

ஸ்பின்

ஸ்பின்

அதேபோல் எப்படிப்பட்ட லென்தில் பந்தை வீச வேண்டும். பவுலர்கள் தொடர்ந்து சொதப்பினால் எப்படி அறிவுரை அளிக்க வேண்டும் என்று முக்கியமான ஆலோசனைகளை வழங்குவார். மிக முக்கியமாக ஸ்பின் பவுலர்கள் சொதப்பும் போது எப்படி ஸ்விங் செய்ய வேண்டும், எங்கே ஸ்விங் செய்ய வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை வழங்குவார்.

திறமை

திறமை

அதிகம் திறமை இல்லாத வீரர்களை வைத்து கூட தோனி விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஆனால் தற்போது கீப்பிங் செய்து வரும் ராகுல் இப்படி அறிவுரைகளை வழங்குவது இல்லை. கீப்பிங் செய்யும் அவர் பவுலர்களிடம் பேசுவது இல்லை. எதற்கு எடுத்தாலும் விக்கெட் விக்கெட் என்று கத்துகிறார். மாறாக வேறு எதுவும் அவர் சொல்வதே இல்லை.

மோசம்

மோசம்

முக்கியமாக ஸ்பீட் பவுலர்கள் லென்த் மிஸ் செய்யும் போது கீப்பர்தான் அறிவுரை வழங்க வேண்டும். ஆனால் ராகுல் அப்படி எதுவும் செய்வது இல்லை. இதனால் தோனியின் மேஜிக்கை இந்திய அணி மிஸ் செய்ய தொடங்கி உள்ளது. இந்திய அணியில் 10 வருடங்களுக்கும் மேல் கீப்பருக்கான தேவையை தோனி தனி நபராக சமாளித்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தற்போது இந்திய அணியில் நிரந்தர கீப்பர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கே. எல் ராகுல் பேட்டிங் செய்யும் அளவிற்கு கீப்பிங் செய்யவில்லை.இதனால் இந்திய அணியில் ராகுல் ஒரு பேட்ஸ்மேனாக நீடிக்கலாம் ஆனால் கீப்பராக நீடிக்க கூடாது, பண்ட் போன்றவர்களை அணிக்குள் கொண்டு வரலாம் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.

Story first published: Tuesday, December 1, 2020, 12:00 [IST]
Other articles published on Dec 1, 2020
English summary
AUS vs IND: Indian team facing keeping issues without Dhoni in the squad.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X