For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடருக்கு முன் அவர் சொன்ன வார்த்தை.. கோபத்தின் உச்சிக்கே சென்ற ஜடேஜா.. என்ன மாதிரியான பதிலடி!

சிட்னி: தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்திற்கும் இந்திய வீரர் ஜடேஜா அதிரடியாக பதிலடி கொடுத்து இருக்கிறார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது ஒருநாள் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணியின் டாப் ஆர்டர் இந்த முறையும் மோசமாக சொதப்பியது. முக்கியமான வீரர்கள் எல்லோரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்.

எப்படி

எப்படி

தவான் 16 ரன்களுக்கும், சுப்மான் கில் 33 ரன்களுக்கும் அவுட் ஆனார்கள். அதன்பின் இறங்கிய ஷ்ரேயாஸ் தவான் 16 ரன்களுக்கும், சுப்மான் கில் 33 ரன்களுக்கும் அவுட் ஆனார்கள். அதன்பின் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. வெறும் 19 ரன்கள் எடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் அவுட்டானார். 11 பந்துகள் பிடித்த ராகுல் வெறும் 5 ரன்கள் எடுத்து அவுட்டானார். கோலியும் கூட இன்று 63 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஐயரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. வெறும் 19 ரன்கள் எடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் அவுட்டானார். 11 பந்துகள் பிடித்த ராகுல் வெறும் 5 ரன்கள் எடுத்து அவுட்டானர். கோலியும் கூட இன்று 63 ரன்கள் எடுத்து அவுட்டானர்.

 எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

இந்த போட்டி மூலம் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்திற்கும் இந்திய வீரர் ஜடேஜா அதிரடியாக பதிலடி கொடுத்து இருக்கிறார். முக்கியமாக ஜடேஜாவிற்கு எதிராக கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்சிரேக்கர் வைத்த விமர்சனங்கள் அனைத்திற்கும் அடுத்தடுத்த போட்டிகளில் பதிலடி கொடுத்துள்ளார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

ஆஸ்திரேலியாவிற்கு செல்ல உள்ள இந்திய அணி அறிவிப்பு வெளியான போதே ஜடேஜா இந்திய அணியில் சேர்க்கப்பட்டதை சஞ்சய் மஞ்சிரேக்கர் விமர்சனம் செய்து இருந்தார். ஜடேஜாவை இந்திய அணியில் சேர்த்ததை ஏற்க முடியாது. அவர் நல்ல ஆல் ரவுண்டர் வீரர் கிடையாது என்று சஞ்சய் மஞ்சிரேக்கர் கூறி இருந்தார்.

தொடர்

தொடர்

இந்த தொடரின் போதும் ஜடேஜா போன்ற வீரர்களுக்கு என்னுடைய ஆதரவு கிடையாது. இந்திய அணியில் இவர் இடம்பெற கூடாது. நான் கேப்டனாக இருந்தால் அந்த அணியில் ஜடேஜாவிற்கு வாய்ப்பு வழங்க மாட்டேன், என்று சஞ்சய் கூறி இருந்தார். இது பெரிய அளவில் சர்ச்சையான நிலையில் தற்போது சஞ்சய் மஞ்சிரேக்கருக்கு ஜடேஜா அதிரடி பதிலடி கொடுத்துள்ளார்.

பதிலடி

பதிலடி

தான் ஆல் ரவுண்டர் இல்லை என்று வைக்கப்பட்ட அனைத்திற்கும் தனது பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். அதுவும் கடைசி மூன்று ஓவர்களில் சிக்ஸ், பவுண்டரி என்று ஜடேஜா ருத்ர தாண்டவம் ஆடி, ஆஸ்திரேலிய பவுலர்களை புரட்டி எடுத்தார். சஞ்சய் மஞ்சிரேக்கர் வைத்த வன்மமான விமர்சனங்களுக்கு மொத்தமாக ஜடேஜா திருப்பிக் கொடுத்துள்ளார்.

இதற்கு முன்

இதற்கு முன்

இப்போது மட்டுமல்ல இதற்கு முன்பே ஜடேஜா சஞ்சய் மஞ்சிரேக்கருக்கு பதிலடி கொடுத்தார்.ஜடேஜாவை குறைகளை உடைய வீரர் என்று சஞ்சய் மஞ்சிரேக்கர் ஐபிஎல்லின் போது குறிப்பிட்டு இருந்தார். இதற்கு முன் உலகக் கோப்பை தொடரிலும் சஞ்சய் விமர்சனத்திற்கு ஜடேஜா அதிரடியாக பதிலடி கொடுத்தார். மும்பை வீரர்களை தவிர வேறு யாரை பற்றியும் சஞ்சய் மஞ்சிரேக்கர் சரியாக பேசியது கிடையாது. சஞ்சய் மஞ்சிரேக்கரின் மோசமான தொடர் விமர்சனங்களுக்கு ஒவ்வொருமுறையும் ஜடேஜா பதிலடி கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 2, 2020, 21:16 [IST]
Other articles published on Dec 2, 2020
English summary
AUS vs IND: Jadeja gives a befitting reply to Sanjay Manjirekkar with his batting.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X