For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வீணாக்கிவிட்டார்.. இத்தனை பேர் இருந்தும் இந்தியா படுதோல்வி.. கோலியின் "அந்த" தவறு.. என்ன நடந்தது?

சிட்னி: ஒரு கேப்டனாக கோலி சரியாக செயல்படாததுதான் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோசமாக ஆடி தோல்வி அடைந்துள்ளது. இன்று இந்திய அணியின் பேட்டிங் பவுலிங் இரண்டும் சரியில்லை.

சிட்னியில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 6 விக்கெட்டிற்கு 374 ரன்களை எடுத்தது. 375 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட்டிற்கு 308 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

தோல்வி

தோல்வி

ஒரு கேப்டனாக கோலி சரியாக செயல்படாததுதான் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. முக்கியமாக கோலி செய்த மூன்று தவறுகள் அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. முதல் விஷயம் கோலி கொடுத்த பவுலிங் ரொட்டேஷன்.

பவுலிங்

பவுலிங்

கோலியின் பவுலிங் ரொட்டேஷன் இந்த போட்டியில் மிக மோசமாக இருந்தது. மும்பை அணி பும்ராவை பயன்படுத்தும் அளவிற்கு கோலி பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை. அதேபோல் சைனியை தேவையில்லாமல் அணியில் எடுத்து கோலி மோசமாக சொதப்பிவிட்டார்.

சரியில்லை

சரியில்லை

பேட்ஸ்மேன் மற்றும் பவர்பிளேவை பொறுத்து கோலி தனது பவுலிங் ரொட்டேஷனை மாற்றவில்லை. இரண்டாவதாக இந்திய அணியின் தேர்விலும் சொதப்பிவிட்டார். ஒரே ஒரு முழு நேர ஸ்பின் பவுலராக சாகல் மட்டுமே இருந்தார். ஜடேஜா கூடுதலாக ஸ்பின் செய்தார். இந்திய அணியில் இன்னொரு ஸ்பின் பவுலர் இருந்திருந்தால் விக்கெட்டுகள் விழுந்து இருக்கும்.

பாண்டியா

பாண்டியா

குறைந்தது பாண்டியாவிற்காவது சில ஓவர்கள் கொடுத்து இருக்கலாம். அதேபோல் மூன்றாவதாக பேட்டிங் ஆர்டரிலும் கோலி மோசமாக சொதப்பிவிட்டார். விக்கெட் விழுகிறது என்று தெரிந்ததும் கோலி நிதானமாக ஆடி இருக்க வேண்டும். மற்ற வீரர்களை நிதானமாக ஆட சொல்லி இருக்க வேண்டும். ஆனால் கோலி அதை செய்யாமல், அனுப்பிய வீரர்களை எல்லாம் அதிரடியாக ஆட சொன்னார்.

எளிதாக

எளிதாக

ஆஸ்திரேலிய வீரர்கள் எளிதாக ஷாட் பந்துகளை போட்டு விக்கெட்டுகளை எடுத்தனர். ஷ்ரேயாஸ், கோலி, மயங்க் என்று மூவரின் விக்கெட்டையும் ஷாட் பந்துகள் போட்டே ஆஸ்திரேலிய வீரர்கள் எடுத்தனர். ஆனால் அதன்பின்பும் கோலி பிளானை மாற்றாமல் வீரர்களை அதிரடியாக ஆட சொன்னதால் தொடர்ந்து விக்கெட் விழுந்து... இந்தியா தோல்வி அடைந்துவிட்டது. அணியில் நல்ல வீரர்கள் இருந்தும் கோலி அவர்களை சரியாக பயன்படுத்தவில்லை.

Story first published: Friday, November 27, 2020, 18:00 [IST]
Other articles published on Nov 27, 2020
English summary
AUS vs IND: Kohli captaincy is the reason behind India's loss against Aussie.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X