கோலி செய்த மிகப்பெரிய தவறு.. ஆஸிக்கு எதிராக இந்தியா சொதப்பியது எப்படி?.. பரபரக்கும் பின்னணி!

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்தது மட்டுமின்றி இந்திய அணி ஒருநாள் தொடரிலும் தோல்வி அடைந்துள்ளது. கேப்டன் கோலியின் மோசமான கேப்டன்சிதான் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

சிட்னியில் நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா வீழ்ந்துள்ளது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 389 ரன்கள் குவித்தது.

இதன்பின் இறங்கிய 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து இந்தியா 338 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இந்திய அணியின் இந்த மோசமான தோல்விக்கு கேப்டன் கோலி செய்த சில தவறுகள்தான் காரணம் என்கிறார்கள். கோலி இன்னும் கொஞ்சம் சிறப்பாக கேப்டன்சி செய்து இருக்கலாம் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

காரணம் 1

காரணம் 1

இந்திய அணியின் மோசமான பவுலர்கள் தேர்வுதான் கோலியின் முதல் தவறாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் பாண்டியாவை கணக்கில் எடுக்காமல் 5 பவுலர்கள் மட்டுமே இடம்பெற்று இருந்தது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கூடுதலாக இந்திய அணியில் ஒரு ஸ்பின் பவுலர் இருந்திருந்தால் இந்தியாவின் பவுலிங் சிறப்பாக இருந்திருக்கும்.

காரணம் 2

காரணம் 2

அதேபோல் கோலியின் பவுலிங் ரொட்டேஷன் சிறப்பாக இல்லை. சைனி ரன் கொடுப்பது தெரிந்தும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தது. இன்னொரு பக்கம் ஷமிக்கு ஒரு ஓவர் மீதம் வைத்தது. பும்ராவை சரியாக ஊக்குவித்து பயன்படுத்தாது என்று இன்று கோலி கேப்டன்சி ரீதியாக நிறைய தவறுகளை செய்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர்

ஷ்ரேயாஸ் ஐயர்

அதேபோல் பார்மில் இல்லாத ஷ்ரேயாஸ் ஐயர், சைனிக்கு வாய்ப்பு வழங்கி பார்மில் உள்ள நடராஜன், மணீஷ் பான்டே போன்றவர்களுக்கு கோலி வாய்ப்பு வழங்கவில்லை. இந்திய அணி கடந்த இரண்டு போட்டிகளாக ஆர்சிபி போல ஆடியதும் குறிப்பிடத்தக்கது.அணியில் ரோஹித்தும் இல்லாத காரணத்தால் தற்போது மொத்தமாக இந்திய அணி சொதப்பி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தொடரை இழந்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
AUS vs IND: Kohli captaincy on fire after India loses to Aussie one day series today.
Story first published: Sunday, November 29, 2020, 17:39 [IST]
Other articles published on Nov 29, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X