For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிப்ரஷனில் கஷ்டப்பட்டார்.. 3 வருட போராட்டம், அவமானம்.. இந்திய மேட்சில் கெட்ட ஆட்டம் போட்ட வீரர்!

சிட்னி: இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் இன்று தாறுமாறு ஆட்டம் ஆடி உள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியே தாறுமாறாக அமைந்துள்ளது. முதல் ஒரு போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அதிரடியாக ஆடி ஆதிக்கம் செலுத்தி உள்ளது.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டியது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் எல்லோரும் சிறப்பாக ஆடினார்கள்.

2 செஞ்சுரி.. தெறிக்க விட்ட பின்ச், ஸ்டீவ் ஸ்மித்.. இந்திய அணியின் மெகா சொதப்பல்!2 செஞ்சுரி.. தெறிக்க விட்ட பின்ச், ஸ்டீவ் ஸ்மித்.. இந்திய அணியின் மெகா சொதப்பல்!

தொடக்கம்

தொடக்கம்

முக்கியமாக ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் இந்திய பவுலர்களை வெளுத்து எடுத்தனர். ஓப்பனிங் வீரர் பின்ச் அதிரடியாக ஆடி 124 பந்தில் 114 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் 76 பந்துகளை பிடித்த வார்னர் 69 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் அதிரடியாக ஆடிய நிலையில் ஸ்மித்தும் வெறும் 66 பந்தில் 105 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடினார்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

இதனால் ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 50 ஓவரில் 6 விக்கெட்டிற்கு 374 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் அது ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் பேட்டிங்தான். இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து சிறப்பாக ஆடிய மேக்ஸ்வெல் வெறும் 19 பந்தில் 45 ரன்கள் எடுத்தார்.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

அதிலும் இவர் 3 சிக்ஸர் அடித்தார். 5 பவுண்டரி அடித்தார். இந்திய அணியின் பவுலர்களை மிகவும் அசால்ட்டாக எதிர்கொண்டார். கடந்த மூன்று வருடமாக இவர் பார்மில் இல்லை. ஆனாலும் இவர் மீது நம்பிக்கை வைத்து ஆஸ்திரேலிய அணி இவருக்கு வாய்ப்பு கொடுத்தது.

டிப்ரஷன்

டிப்ரஷன்

இடையில் மன அழுத்தம் காரணமாகவும் இவர் மோசமாக கஷ்டபட்டு வந்தார். பார்மை இழந்த இவர்.. டிப்ரஷன் வந்து சில நாட்கள் கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியாமல் ஓய்வு எடுக்கும் நிலை கூட ஏற்பட்டது. இதன் காரணமாக இவர் கடுமையாக கிண்டலுக்கு உள்ளானார்.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் தொடரிலும் இந்த வருடம் மோசமாக ஆடினார். பஞ்சாப் அணிக்காக ஆடிய இவர் ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை. இதனால் இணையத்தில் அவரை பலரும் கிண்டல் செய்தனர். இந்த நிலையில் அனைத்தையும் தூசு தட்டிவிட்டு, மொத்தமாக இன்று மேக்ஸ்வெல் பார்மிற்கு திரும்பி உள்ளார்.

காட்டு அடி

காட்டு அடி

இந்தியாவிற்கு எதிராக மிக சிறப்பாக ஆல்ரவுண்டர் ஆட்டம் ஆடி உள்ளார். தனது பழைய ஸ்டைலை மீட்டு கொண்டு வந்துள்ளார். ஸ்பின் பவுலர்கள் மட்டுமின்றி ஸ்பீட் பவுலர்கள் ஓவரிலும் இன்று மேக்ஸ்வெல் சிறப்பாக ஆடி உள்ளார். ஆஸ்திரேலிய அணியில் இவர் மீண்டும் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Friday, November 27, 2020, 14:12 [IST]
Other articles published on Nov 27, 2020
English summary
AUS vs IND: Maxwell gets back to form after almost three years
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X