இந்திய அணியில் இடம்பிடித்தார் நடராஜன்.. திடீரென முடிவு எடுத்த கோலி.. என்ன நடந்தது?.. இதுதான் காரணம்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெற்றுள்ளார். முதல்முறையாக சர்வதேச ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் இதன் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட், ஒருநாள், டி 20 என்று மிக நீண்ட தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது.

2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இந்தியா இழந்துள்ளது. இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி வைட் வாஷ் செய்ய ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது

இன்று போட்டி

இன்று போட்டி

ஆஸ்திரேலியாவில் இருக்கும் கான்பெரா மைதானத்தில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடக்க உள்ளது. இன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெற்றுள்ளார். முதல்முறையாக சர்வதேச ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் இதன் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார்.

நீக்கம்

நீக்கம்

இந்திய அணியில் இருந்து ஷமி, சைனி நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக அணிக்குள் ஷரத்துள் தாகூர், நடராஜன் இடம்பெற்றுள்ளனர். சைனிக்கு பதிலாக அணிக்குள் நடராஜன் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் டி 20 மற்றும் ஒருநாள் அணியில் அறிவிக்கப்பட்ட போது அதில் நடராஜன் சேர்க்கப்பட்டார். முதலில் வலைப்பயிற்சி பவுலராக மட்டுமே மட்டுமே இவர் சேர்க்கப்பட்டார்.

பவுலிங்

பவுலிங்

ஆனால் அதன்பின் டி 20 அணியில் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக விலகியதால் நடராஜன் அணிக்குள் வந்தார்.பின் சைனி காயம் காரணமாக அவதிப்பட்டதால், நடராஜன் ஒருநாள் அணிக்குள்ளும் வந்தார். ஆனாலும் சைனி காயம் சரியான நிலையில் இந்திய அணியில் இடம்பிடித்தார். இதனால் ஆடும் ஒருநாள் அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

எப்படி

எப்படி

ஆனால் அணியில் இடம்பிடித்த சைனி தொடர்ந்து மோசமாக பவுலிங் செய்து வந்தார். தொடர்ந்து தன்னுடைய இரண்டு போட்டியிலும் 80+ ரன்களை கொடுத்தார். ஒரே ஒரு விக்கெட் மட்டுமே இரண்டு போட்டியிலும் எடுத்தார். இதன் காரணமாக தற்போது இந்திய அணியில் இருந்து சைனி நீக்கப்பட்டு நடராஜன் அணிக்குள் வந்துள்ளார்.

நடராஜன்

நடராஜன்

தமிழக வீரர் நடராஜன் வலைப்பயிற்சியில் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். சைனியை விட இவரின் பவுலிங் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோலிதான் இன்று இந்திய அணிக்கான கேப்பை நட்ராஜனிடம் கொடுத்தார்.

நடராஜன் எப்படி

நடராஜன் எப்படி

ஐபிஎல் தொடரில் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் என்று பெயர் எடுத்தவர் நடராஜன். யார்க்கர் மட்டுமின்றி, துல்லியமாக பவுன்சர் பந்துகளையும் போடுகிறார். அதேபோல் இவரின் பவுலிங் நன்றாக ஸ்விங் ஆகவும் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக இன்று இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
AUS vs IND: Natarajan made a debut in Team India against Aussie today as an oneday bowler.
Story first published: Wednesday, December 2, 2020, 9:22 [IST]
Other articles published on Dec 2, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X