ஒரே டீமிற்குள் இரண்டு குழு.இந்திய அணிக்குள் நடக்கும் தேவையில்லாத "கேங்க்" பிரிவினை.பரபர பின்னணி!

சிட்னி: இந்திய அணிக்குள் தேவையில்லாத கேங்க் பிரிவினை உள்ளது, வீரர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்று கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு கொஞ்சம் கூட இல்லாத அளவிற்கு இந்தியா மோசமான தோல்வியை தழுவி உள்ளது.

இந்திய அணியின் தொடர் தோல்வி காரணமாக கேப்டன் கோலியின் கேப்டன்சி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடரை இந்தியா இழந்த நிலையில், இந்திய அணியின் தற்போது பிரச்சனைகள் குறித்து பிசிசிஐ ஆலோசனை செய்து வருகிறது. இந்திய அணியில் இருக்கும் வீரர்களுக்கு இடையே சரியான ஒற்றுமை, கூட்டு மனப்பான்மை இல்லாதது இந்திய அணியின் சரிவிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. வீரர்கள் சிலர் குழுவாக பிரிந்து செயல்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

தொடக்கம்

தொடக்கம்

கடந்த உலகக் கோப்பை தொடரில் இருந்தே இந்திய அணிக்குள் இந்த சிக்கல் இருக்கிறது. இந்திய அணிக்குள் ரோஹித் கொண்டு வந்த வீரர்கள், கோலி கொண்டு வந்த வீரர்கள் என்று இரண்டு குழுக்கள் உள்ளது. இதில் சாஹல், ராகுல், குல்தீப் போன்ற வீரர்கள் கோலி மூலம் இந்திய அணியில் வளர்க்கப்பட்டனர். பாண்டியா, பும்ரா போன்றவர்கள் ரோஹித் மூலம் வளர்க்கப்பட்டனர்.

கூடுதல்

கூடுதல்

இந்த நிலையில்தான் இந்திய அணிக்குள் தனக்கு ஆதரவான வீரர்களை கொண்டு வர கோலி தீவிரமாக முயன்று வருகிறார். மயங்க், சைனி ஆகியோருக்கு எல்லாம் கோலி வாய்ப்பு கொடுத்து வளர்த்து விட பார்க்கிறார். இந்திய அணிக்குள் தனக்கு ஆதரவான வீரர்கள் அதிகம் இருக்க வேண்டும் என்று கோலி நினைக்கிறார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களை கோலி எடுப்பதே இல்லை என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

புகார்

புகார்

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் போன்றவர்களை அணியில் எடுக்கலாம். ஆனால் கோலியோ தேவையில்லாமல் மயங்க், ஷ்ரேயாஸ் போன்ற வீரர்களை அணியில் எடுக்கிறார். நேற்று சூர்ய குமார் ஆடி இருந்தால் இந்தியாவிற்கு கூடுதல் பலமாக இருந்திருக்கும் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

உரசல்

உரசல்

உலகக் கோப்பை தொடரில் இருந்தே கோலி - ரோஹித் இடையே இந்த உரசல் உள்ளது. இதனால் தற்போது அணிக்குள் வீரர்கள் எல்லோரும் கேங்க் கேங்காக பிரிந்து செயல்படுகிறார்கள் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. ரோஹித் இருந்தால் பும்ரா நன்றாக பந்து வீசுகிறார், இல்லையென்றால் சொதப்பிவிடுகிறார். இந்த எல்லா பிரச்சனையையும் சரி செய்யவே நேற்று ரோஹித் மற்றும் கோலி இடையே சமாதான கான்பிரன்ஸ் கால் மேற்கொள்ளப்பட்டது.

தீர்வு

தீர்வு

இதில் கொஞ்சம் சுமூகமான தீர்வு எட்டப்பட்டது என்கிறார்கள். ஆனால் ரோஹித் இந்திய அணிக்குள் மீண்டும் வந்து கோலியுடன் பேசினால் மட்டுமே எல்லாம் சரியாகும். அதுவரை எதுவும் மாறாது. இந்திய அணியில் வீரர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருக்கிறது. அதை பிசிசிஐ அமைப்புதான் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
AUS vs IND: What is happening inside team India after Rohit Sharma ommission?.
Story first published: Monday, November 30, 2020, 13:20 [IST]
Other articles published on Nov 30, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X