For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இக்கட்டான சூழ்நிலை.. கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்துவிடும்.. விளாசிய ஹர்திக்..பின்னணியில் பரபர காரணம்

சிட்னி: இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடியதற்கு பின் முக்கியமான காரணங்கள் இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு கொஞ்சம் கூட இல்லாத அளவிற்கு இந்தியா மோசமான தோல்வியை தழுவி உள்ளது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா வீழ்ந்துள்ளது. 3வது ஒருநாள் போட்டி தற்போது இரண்டு அணிகளுக்கும் இடையில் நடந்து வருகிறது.

இவர் அவரை விட மோசமாச்சே.. இந்திய அணிக்கு அதிர்ச்சி தந்த செய்தி.. ஆஸ்திரேலியா செய்யும் மாஸ் மாற்றம் இவர் அவரை விட மோசமாச்சே.. இந்திய அணிக்கு அதிர்ச்சி தந்த செய்தி.. ஆஸ்திரேலியா செய்யும் மாஸ் மாற்றம்

எத்தனை

எத்தனை

50 ஓவர் முடிவில் இதில் இந்திய அணி 302 ரன்கள் எடுத்துள்ளது. முதலில் 152 ரன்கள் இருக்கும் போதே இந்திய 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின் அதிரடியாக பார்ட்னர்ஷிப் அமைத்த ஹர்திக் பாண்டியா -ஜடேஜா இணை 302 ரங்களுக்கு இந்தியாவை கொண்டு வந்து காப்பாற்றியது.

பேட்டிங்

பேட்டிங்

இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்டியா 76 பந்தில் 92 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 50 பந்தில் அதிரடியாக ஆடி 66 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் பாண்டியா அதிரடியாக ஆடுவதற்கு பின் நிறைய காரணங்கள் இருக்கிறது. இந்திய அணியில் தன்னுடைய இருப்பிடத்தை உறுதி செய்வதற்காக பாண்டியா இப்படி ஆடி வருகிறார்.

பாண்டியா

பாண்டியா

ஆல் ரவுண்டரா பாண்டியா போன வருடம் காலில் ஆபரேஷன் செய்த பின் பவுலிங் செய்யவே இல்லை. ஐபிஎல் தொடரிலும் பாண்டியா பவுலிங் செய்யவே இல்லை. இந்த நிலையில் ஒருவருடம் கழித்து போன மேட்சில்தான் பாண்டியா பவுலிங் செய்தார். 4 ஓவர்கள் மட்டுமே பவுலிங் செய்த பாண்டியா மிகவும் சிறப்பாக செயல்பட்டார். இவர் பவுலிங் செய்யாமல் இருப்பதால் இந்திய அணியில் 6 பவுலர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

6 பவுலர்கள்

6 பவுலர்கள்

பாண்டியா பவுலிங் செய்ய மறுத்து வருகிறார். இதனால் இந்திய அணியில் 5 பவுலர்கள் மட்டுமே தற்போது உள்ளனர். இந்திய அணியின் பவுலிங் மோசமாக சொதப்புவதற்கு இதுவும் கூட ஒரு காரணம் ஆகும். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தற்போது ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக இறங்கி பேட்டிங் செய்து வருகிறார். இதனால் இவர் தன்னுடைய பேட்டிங்கில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

பேட்டிங்

பேட்டிங்

பாண்டியா பவுலிங் செய்வது இல்லை. பேட்டிங்கும் சொதப்பினால் மொத்தமாக இவரை தூக்கிவிட்டு பவுலிங் செய்ய சம்மதிக்கும் ஒரு ஆல் ரவுண்டரை இந்திய அணி களமிறக்கும். இதனால் தனது கிரிக்கெட் கேரியரை இழக்க கூடாது என்பதால் தற்போது அதிரடி பேட்ஸ்மேன் அவதாரத்தை பாண்டியா எடுத்துள்ளார்.

மூன்று போட்டிகள்

மூன்று போட்டிகள்

இதனால்தான் கடந்த மூன்று போட்டிகளாக பாண்டியா சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். முதல் போட்டியில் 90, இரண்டாவது போட்டியில் 28 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட், மூன்றாவது போட்டியில் 92 ரன்கள் என்று இவர் அதிரிடி காட்டி வருகிறார் . இவரின் இந்த பேட்ஸ்மேன் அவதாரம் காரணமாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் வலிமை அடைந்துள்ளது .

Story first published: Wednesday, December 2, 2020, 13:13 [IST]
Other articles published on Dec 2, 2020
English summary
AUS vs IND: Why Hardik Pandya batting so well all of a sudden against Aussie?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X