For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடப்பாவமே.. பாகிஸ்தான் கேப்டன் பயிற்சி செய்ததை பார்த்து.. பாக். ரசிகர்களே கலாய்த்த சம்பவம்!

டாண்டன் : பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மது பயிற்சி செய்த வீடியோவை பார்த்து விட்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கலாய்த்தும், விமர்சித்தும் வருகின்றனர்.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இன்று உலகக்கோப்பை தொடரில் லீக் போட்டியில் மோதுகின்றன.

இந்தப் போட்டிக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சர்ப்ராஸ் அஹ்மது பயிற்சி செய்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு.

போதும்.. போட்டியை உடனே மாற்றுங்கள்.. ஐசிசியிடம் இங்கிலாந்திற்கு எதிராக கொதிக்கும் ரசிகர்கள்.. ஏன்? போதும்.. போட்டியை உடனே மாற்றுங்கள்.. ஐசிசியிடம் இங்கிலாந்திற்கு எதிராக கொதிக்கும் ரசிகர்கள்.. ஏன்?

என்ன பயற்சி?

பாகிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளர் உதவியுடன் கேட்ச் பிடித்து விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்து வந்தார் சர்ப்ராஸ் அஹ்மது. கேட்ச் பயற்சி என்றால் டைவ் அடித்து பிடிப்பதெல்லாம் இல்லை. சுமார் 20 அடி தூரத்தில் நின்று இருந்தார் பயிற்சியாளர்.

ஸ்கூல் லெவல்

அவர் இடுப்புக்கு கீழே பந்தை வீச, அதைப் பிடித்து பயிற்சி செய்தார் சர்ப்ராஸ் அஹ்மது. இதைக் கண்டு பொறுக்க முடியாத பாகிஸ்தான் ரசிகர்கள். "இது ரொம்ப ஈஸி.. ஸ்கூல் லெவல் பயிற்சி" என அவரை கிண்டல் செய்துள்ளனர்.

டைவ் அடிக்க மாட்டார்

டைவ் அடிக்க மாட்டார்

சர்ப்ராஸ் அஹ்மது நீண்ட காலமாக பாகிஸ்தான் அணிக்கு விக்கெட் கீப்பராக இருந்து வந்தாலும், அவர் மற்ற அணிகளின் விக்கெட் கீப்பர்கள் போல டைவ் அடிப்பது, பாய்ந்து ரன் அவுட் செய்வது எல்லாம் செய்ய மாட்டார்.

சராசரி கீப்பிங்

சராசரி கீப்பிங்

மிகவும் சராசரியாகத் தான் இருக்கும் அவரது விக்கெட் கீப்பிங். இது தொடர்ந்து விமர்சனம் செய்யப்பட்டு வந்தாலும், சர்ப்ராஸ் அஹ்மது கேப்டன் என்பதால், வேறு வழியில்லாமல் அவரையே விக்கெட் கீப்பராக தொடரச் செய்து வருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு.

ஏன் சர்ப்ராஸ்?

ஏன் சர்ப்ராஸ்?

சர்ப்ராஸ் அஹ்மதுக்கு முன் இருந்த சில விக்கெட் கீப்பர்களும் சரியாக செயல்படவில்லை. அவர்களோடு ஒப்பிட்டால் அதற்கு இவரே பரவாயில்லை என்ற முடிவில் தான் விக்கெட் கீப்பராக தொடர்ந்து நீடித்து வருகிறார்.

ரசிகர்கள் விமர்சனம்

இந்த நிலையில் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் தன் ட்விட்டர் பக்கத்தில் அவரது ஸ்கூல் லெவல் பயிற்சி வீடியோவை வெளியிட்டுள்ளது. அதை கண்டு பாகிஸ்தான் ரசிகர்களே விமர்சனம் செய்து வருகின்றனர்.

அக்தர் கடும் விமர்சனம்

அக்தர் கடும் விமர்சனம்

உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்த பின் விமர்சித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷோயப் அக்தர், சர்ப்ராஸ் அஹ்மது மிகவும் குண்டாக, உடற்தகுதி இல்லாமல் இருக்கிறார் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, June 12, 2019, 16:38 [IST]
Other articles published on Jun 12, 2019
English summary
AUS vs PAK Cricket World cup 2019 : Pakistan Captain Sarfaraz Ahmed trolled after practice session
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X