For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னய்யா இது? படுமோசம்.. இப்படிலாம் நான் பார்த்ததே இல்லை.. பாகிஸ்தானை பிரித்து மேய்ந்த ஜாம்பவான்!

அடிலெய்டு : பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை மிக மோசமானது என விமர்சனம் செய்துள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரிக்கி பாண்டிங்.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது.

ஆஸ்திரேலியாவின் வார்னர் - லாபுஷக்னே இணைந்து 361 ரன்கள் குவித்த போது பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு எந்த வகையிலும் அச்சுறுத்துவதாக இல்லை. இது குறித்து பேசிய ரிக்கி பாண்டிங், பல ஆண்டுகளில் ஆஸ்திரேலியா வந்த அணிகளிலேயே இது தான் மோசமான பந்துவீச்சைக் கொண்ட அணி என சரமாரியாக விமர்சனம் செய்தார்.

பகல் இரவு போட்டி

பகல் இரவு போட்டி

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.

வார்னர் அதிரடி ஆட்டம்

வார்னர் அதிரடி ஆட்டம்

டேவிட் வார்னர் மிரட்டலாக ஆடி முச்சதம் கடந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரை எந்த வகையிலும் பாகிஸ்தான் பந்துவீச்சு பாதிக்கவில்லை. அவர் ஸ்ட்ரைக் ரேட் 80 என்பதை வைத்தே அவர் எத்தனை எளிதாக ரன் குவித்தார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஆஸ்திரேலியா அபாரம்

ஆஸ்திரேலியா அபாரம்

அடுத்து மார்க்ஸ் லாபுஷாக்னே சதம் கடந்து 162 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 3 விக்கெட்கள் இழப்பிற்கு 589 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. பாகிஸ்தான் அணி வெறும் 3 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தியதும் பலரை வியக்க வைத்தது.

விக்கெட் வீழ்ச்சி குறைவு

விக்கெட் வீழ்ச்சி குறைவு

பாகிஸ்தான் அணி வீழ்த்திய 3 விக்கெட்களும் ஷஹீன் ஷா அப்ரிடி வீழ்த்தியவை. முகமது அப்பாஸ், முகமது மூஸா, யாசிர் ஷா ஆகியோர் படு மோசமாக பந்துவீசினர். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஒருநாள் போட்டி போல ரன்களை வாரி வழங்கினர். பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு அளித்த ரன் விகிதம் - அப்பாஸ் 3.44, மூஸா 5.70, யாசிர் ஷா 6.15, இப்திகார் அஹ்மது 5.

அனுபவம் இல்லாத கேப்டன்

அனுபவம் இல்லாத கேப்டன்

பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலி கேப்டன்சியில் அனுபவம் இல்லாதவர் என்பது அவரின் செயல்பாடுகளில் வெளிப்படையாக தெரிந்தது. ஆஸ்திரேலியா அதன் சொந்த மண்ணில் மிகவும் வலுவான அணி எனும் நிலையில், பாகிஸ்தான் பலவீனமான கேப்டனை வைத்துக் கொண்டு தடுமாறியது.

சோர்ந்து காணப்பட்ட பாகிஸ்தான்

சோர்ந்து காணப்பட்ட பாகிஸ்தான்

மேலும் முதல் இரண்டு நாட்களில் வெறும் 3 விக்கெட்களை மட்டுமே பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வீழ்த்தியது அனைவரையும் கேள்வி கேட்க வைத்தது. பந்துவீச்சாளர்களின் உடல் மொழியே மந்தமாக இருந்தது. பீல்டிங்கில் பல இளம் வீரர்கள் சோர்ந்து போய் ஏனோதானோவென பீல்டிங் செய்து சொதப்பி வந்தனர்.

பாண்டிங் விமர்சனம்

பாண்டிங் விமர்சனம்

இந்த நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரிக்கி பாண்டிங் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு குறித்து பேசுகையில், "அவர்கள் மிக மோசமாக செயல்பட்டார்கள். அவர்களிடம் ஆள் இல்லை. ஒரு டெஸ்ட் தாக்குதலுக்கான பந்துவீச்சு என்ற அளவில் பார்த்தால் அவர்களின் பந்துவீச்சு மிக மோசமானது" என்றார்.

மோசமான பந்துவீச்சு

மோசமான பந்துவீச்சு

"பல ஆண்டுகளில் நம் நாட்டில் இத்தனை மோசமான பந்துவீச்சை நான் பார்த்ததில்லை என நினைக்கிறேன். நான் விமர்சிக்கவில்லை. அது தான் அவர்களிடம் இருப்பது" என மிக வெளிப்படையாக பாகிஸ்தான் பந்துவீச்சை பற்றி விமர்சித்தார் பாண்டிங்.

நசீம் ஷா எங்கே?

நசீம் ஷா எங்கே?

முதல் டெஸ்டில் ஆடிய 16 வயது வீரர் நசீம் ஷாவுக்கு காயம் ஏதும் இருப்பது போல தெரியவில்லை. பின்னர், ஏன் இரண்டாவது போட்டியில் அவர் ஆடவில்லை. வெறும் 7 முதல்தர போட்டியில் ஆடிய முகமது மூஸா என்ற இளம் வீரரை அவர்கள் ஆட வைத்துள்ளனர். அவர் டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளர் போலவே இல்லை எனவும் கூறினார் பாண்டிங்.

பாகிஸ்தான் பேட்டிங் எப்படி?

பாகிஸ்தான் பேட்டிங் எப்படி?

பந்துவீச்சில் சொதப்பிய பாகிஸ்தான் அணி பேட்டிங்கிலும் சொதப்பியது. முதல் இன்னிங்க்ஸில் பாபர் ஆசாம் 97, பந்துவீச்சாளர் யாசிர் ஷா 113 ரன்கள் குவித்து ஓரளவு ஆறுதல் அளித்தனர். எனினும், பாகிஸ்தான் 302 ரன்கள் மட்டுமே எடுத்து பாலோ ஆன் பெற்றது.

Story first published: Sunday, December 1, 2019, 14:24 [IST]
Other articles published on Dec 1, 2019
English summary
Aus vs Pak : Ricky Ponting says Pakistan’s bowling attack is worst in long time. He also questions the reason behind dropping Naseem Shah for second test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X